பக்கம்:நாகப்பட்டினம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நாகை 27

இப்பொருள் கருதியே உ.வே.சா. அவர்கள் வடக்கே உள்ள 'நீர்ப்பேர்"இஃதாகஇருக்கலாம் என்று குறித்தார்.

உரையாசிரியர் நச்சினார்க்கினியர் நீர்ப்பெயற்று என்பதையே பாடமாகக்கொண்டு பொருள் எழுதியதால் உ.வே.சா. அவர்களும் வேறு குறிப்பொன்றும் எழுதாமல் பாடவேறுபாட்டைக்காட்டிமட்டும் விட்டார். -

'நீர்ப்பெயர்த்து என்னும் பாடத்தைக்கொண்டு நீரை (இடம்) பெயர்த்திடும் என்று பொருள் கொள்ளலாம். பொருநராற்றுப் படையில் நீர்ப்பெயர்ச்சுழி என்றுள்ளது. அதற்கு நச்சினார்க் கினியர் "நீரிடத்துப் பெயர்த்தலையுடைய சுழிபோல" (18) என்று விளக்கந் தந்தார். இவ்வழியில் நீர்ப்பெயர்த்தெல்லை என்னும் பாடத்தைக் கொண்டு கடல்நீரைப் பெயர்த்துக் கரைக்குக் கொணரும் இடமாகிய எல்லை என்று பொருள் கொள்ளலாம். அவ்வெல்லை இடம் பற்றி மேலே கொள்ளும் முடிவிற்கு மிகப் பொருந்துகின்றது. -

எனவே, இப்பொருள்களில் பின்வரும் இரண்டைத் தேர்ந்து எடுத்துக்கொண்டு மேல் ஆராயலாம்.

"நீர்ப்பெயற்றெல்லை" - நீரைப் பெய்யச் செய்யும் எல்லை. "நீர்ப்பெயர்த்து"எல்லை - நீரைப் பெயர்த்திடும் எல்லை. . இவ்விரு பொருள்களையும் மையமாகக் கொண்டு நோக்கினால் "ஓர் இடம் கடற்கரையில் உள்ள ஊருக்கு எல்லையாக இருந் துள்ளது' என்னும் கருத்து நிலைப்படும்.

நிலைப்படும் இக்கருத்தைக் கொண்டு முன்னர் நாம் கண்ட 'பரவை என்னும் சிற்றுரை அணுகலாம்.

அங்கு கடலுள் நீர்ச்சுழல் இருப்பதை அறிந்தோம். அந்தச் சூழலால் பல காலங்களில் கடல் நீர் எழும்பி உயர்ந்து கரையை அடைத்தவாறு பரவச் செய்தது. அதனால் அது 'பரவை எனப் பட்டது. அவ்விடம் மட்டுமின்றி அதனை உள்ளிட்ட பேரூர்ப் பகுதி "நீர்ப்பெயற்று" என்று பெயர் பெற்றது.

அந்த எல்லை அப்பக்கம் வரும் கடற் பயணியர்க்கு ஒர் எச்சரிக்கை எல்லையாகக் குறிக்கப்பட்டதாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/45&oldid=584927" இலிருந்து மீள்விக்கப்பட்டது