பக்கம்:நாகப்பட்டினம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நாகை 37

"அது கேட்டுச் சோழன் பெருநற்கிள்ளி கோழியகத்து உள்ளே எத்திறத்தாலும் வரந்தரும் இவளோர் பத்தினியாகுமென நங்கைக்குக் கோட்டமும் அமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித் தோனே' - என்று அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். இதன்படி சோழன் நெடுமுடிக்கிள்ளி கண்ணகிக்கு உறையூரில் கோட்டம் எடுத்தான் என்பதை அறியும் போதே ஏன் கண்ணகியின் நகராகிய காவிரிப்பூம்பட்டினத்தில் எடுக்கவில்லை என்ற ஐயமும் எழுகின்றது. காவிரிப்பூம்பட்டினம் கடல்கோளால் அழிந்து "ஒரு தனி போயினன் உலக மன்னவன்" என்றதன்படி தனியே சோழப் பெருநகராம் உறையூர் அடைந்ததால் நெடுமுடிக்கிள்ளி உறையூரில் எடுக்க நேர்ந்தது என உணர்ந்து ஐயத்தை விடுவிக்கலாம். -

எனவே, இச்சோழ மன்னன் எடுத்தபோதே இலங்கைக் கயவாகு இலங்கையில் எடுத்ததால் அக்காலக்கட்டம் பூம்புகார் அழிவுற்ற காலக்கட்டம் என்றாகின்றது. இலங்கைக் கயவாகுவின் காலத்தை அறிந்தால் அவன் ஆட்சிக் காலந்தான் பூம்புகார் அழிவுக்காலம் என்றுணரலாம். இலங்கை வரலாற்று நூலான மகாவமிசம் கூறுகிறபடி இக்கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற் பகுதிவரை ஆண்டுள்ளான்.

முன்னர் கண்ட பயணி தாலமியின் குறிப்பின்படி கி.பி. 150 வரை காவிரிப்பூம்பட்டினம் வளமாக அழிவின்றி விளங்கியுள்ளது.

எனவே கி. பி.150 -இற்குப் பின்னர் இலங்கைக் கயவாகுவின் ஆட்சிப் பிற்பகுதியாகிய கி.பி. 150 இற்குமேல் பூம்புகார் அழிவுற்ற தாகின்றது. இக்கால வட்டத்தைச் சுருக்கினால் கி.பி. 160 இலிருந்து 170 இற்குள் இவ்வழிவு நிகழ்ச்சி நேர்ந்ததாகக் கொள்ளவேண்டும். இவ்வாறு கொள்வது வரையறுக்கப்பட்ட பெருமளவு பொருந்தும் வட்டமேயாகும்.

இத்துணை விரிவாகக் காவிரிப்பூம்பட்டினப் பகுதிக் கடல் கோளை ஆராய்வதன் நோக்கம் - அதிலும் ஒர் அழிவைப் பற்றிய விரிவான நோக்கம் ஓர் வரலாற்றுக்கல்லை வெளிப்படுத்துவதே யாகும்.

ஒ. தோற்றத்திற்கு அழிவு ஒரு முன்னோடி

ஒன்றன் அழிவு மற்றொன்றின் தோற்றத்திற்கு அடிகோலும்

என்பதற்கு உண்மை உண்டு. விதை ஊறிச் சிதைந்து அழிவதால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/55&oldid=584937" இலிருந்து மீள்விக்கப்பட்டது