பக்கம்:நாகப்பட்டினம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் பெற்ற நாகை 盗耳下

சகுந்தலையின் உடல்நிறத்தைக் காளிதாசர் இவ்வாறே முல்லை போன்ற உடல் நிறத்தவள்’ என்றார். அத்தகைய ஆரிய இனத்தவர் நாகரினத்துப் பெண்களை மணந்தனர் என்பதும் நாகர்தம் எழிலை வலுப்படுத்துவதாகும். -

எனவே, இந்திய மண்ணும் தமிழ் நிலமும் நாகரால் கவரப் பட்டுத் தாக்கத்திற்கு உள்ளாயின என்பது ஆழங்காணப்பட்ட உண்மையே. இவ்வுண்மை நாகையில்- முற்காலப் பதரிதிட்டையில் நாகர் குடியமர்ந்து விளக்கமுற்றபோது - காவிரிபூம்பட்டினம் கடல்கொள்ளப்பட்டுக் கலைந்த மக்கள் புகுந்தபோது - நாகர் இருக்கையாகவே கண்டனர். -

அதனால் ഷജ്ഞങ്ങ நாகர் ஊராகப் பெயர் கொண்டனர். அது விரைந்து துறைமுகப்பட்டினமானதும் நாகர்பட்டினமாகப் பெயர் பெற்றது என்பது திண்னமாகி வைரம் பாய்ந்த உண்மையாகிறது. எ. இனத்தாரால் பெயர்

வேற்று நிலத்திலிருந்து ஒர் இனத்தார் ஒரு நிலத்தில் குடியேறுதல் இயற்கை. இவ்வியற்கையால் குடியேறிய இனத்தாரால் குடியேற்ற நிலம் பெயர் பெறுதலும் உலகத்தில் பெருநிகழ்ச்சி யாகும். பலவற்றைக் காட்டலாமாயினும் ஒன்றே போதுமானதாகும். இன்று இங்கிலாந்து எனப்படும் பிரிட்டன் இப்பெயரை எவ்வாறு பெற்றது?

கி.பி. நான்காம் நூற்றாண்டில் செர்மனியிலிருந்த ஓர் இனத்தார் படையெடுத்து வென்று இங்குக் குடியேறினர். ஏறிய இனத்தின் பெயர் ஆங்கில். ஆங்கில் இனத்தார் குடியேறிய நிலம் (Land) அவர் பெயரால் ஆங்கிலாந்து என்று பெயர் பெற்றது.

அச்சொல்லே அங்கு வாழ்ந்த மொழிக்கும் ஆங்கிலம் எனப் பெயர் ஆயிற்று. -

ஆங்கில் என்ற இனத்தாருடன் சாக்சர் என்ற இனத்தாரும் குடியேறினர். இரண்டினத்தாரும் பேசிய மொழியின் கூட்டே "ஆங்கிலோ - சாக்சன் எனப்பெற்றது. இந்தியர்க்குப் பிறந்த கலப்பால் ஆங்கிலோ - இந்தியர்' என்ற ஒரு பிரிவும் தோன்றியது. அந்த ஆங்கிலாந்து தான் காலப்போக்கில் இங்கிலாந்து ஆகி "ஆங்கிலமும் இங்கிலீசு ஆகியது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/79&oldid=584961" இலிருந்து மீள்விக்கப்பட்டது