பக்கம்:நாகப்பட்டினம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நாகபட்டினம்

தஞ்சை மாவட்டத்தில் அமைந்தது மன்னார்குடி இதன் பழம்பெயர் மன்னவர்குடி சோழ மன்னரது குடிகள் அமைந்த ஊர். இங்கு முதற் குலோத்துங்கன் ஒரு திருமாலியக் (வைணவக்) கோயிலை எழுப்பினான். அது குலோத்துங்க சோழ விண்ணகரம்' என்று கல்வெட்டில் குறிக்கப்பெறும். அது இப்போது இராச கோபாலசாமி கோயில் என்று சமயத்தாரால் மாற்றப்பெற்று வரலாற்றுப் பெயரை இழந்து நிற்கிறது. எழுப்பித்தவன் பெயரையும் மறைத்து அழித்து நிற்கிறது. இங்கு அரசரது நேர்முகக் குடிகள் இருந்தமையால் இராச மன்னார்குடி என்றும் பெயர் வழங்கப் பெறுகிறது.

இவ்வூரின் கிழக்கு எல்லையில் அரசர் பாளையம்' என்றும் தெற்கெல்லையில் உருக்குமணி பாளையம் என்றும் இரண்டு பாளையங்கள் உள்ளன. அரசர் அமர்த்தும் ஆட்சிப் பாதுகாப்பான பாளையர் இருந்த இடம் அரசர் பாளையம். உருக்குமணி கோயிலின் பாதுகாப்பான பாளையர் இருந்த இடம் உருக்குமணி பாளையம். இவ்வாறு பல பாளையங்கள் தமிழகத்தில் ஆங்காங்கு உள்ளன.

மன்னார்குடி ஒரு குடி ஊரேயன்றித் தலைநகர் அன்று. இது போன்றே நாகை வெளிப்பாளையமும் தலைநகர் அமைப்பில் இருந்ததன்று. காடவர்கோன்பாடி

இவ்வெளிப்பாளையத்தை ஒட்டி வடக்கே தொடங்கும் மக்கள் வாழ்பகுதி காடம்பாடி' எனப்படுவது. பாடி என்னும் சொல் லமைந்ததால் இஃதும் ஆட்சி அறிகுறிப்பெயரே. இதன் முழுப்பெயர் காடவர்கோன்பாடி'. நாகையில் உள்ள குமரன் கோயிலுக்கு உரிமையுடையதாய் உளள சில பகுதி நிலம் அக்கோயிலின் பதிவு ஆவணங்களில் "காடவர் கோன்பாடி" என்றே குறிக்கப்பட்டுள்ளது.

பாடி வீடு என்றால் நிலைப்பில்லாமல் தங்குவதற்கு அமைக்கப்படும் கூடாரம். போர்ப்பாசறையிலும் பாடிவீடுகள் அமையும். அரசர் சுற்றுப்பயணத்தின்போதும் பாடி வீடு அமையும். நரசிம்ம பல்லவன் காலத்தில் அவன் ஆட்சி அலுவலன் ஒருவன் காடவர் கோன் பட்டம் பெற்றவன். காடவர் என்பது பல்லவருக்குரிய பெயர் என்பதாகக் கல்வெட்டாய்வாளர் சதாசிவப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/86&oldid=584968" இலிருந்து மீள்விக்கப்பட்டது