பக்கம்:நாகப்பட்டினம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை 67

எல்லை வங்கக்கடல். தெற்கு எல்லை இக்காலக் கடுவையாறு. எனவே கிழக்கு, தெற்கு இரண்டிலும் தோரண வாயில்கள் இல்லை. கோட்டைகள் இருந்திருந்தால் புதிய வீடுகள்கட்ட கிணறுகள் அமைக்கத் தோண்டிய போதும், பயிரிட் அகழ்வுகள் நேர்ந்தபோதும் கோட்டையின் அடித்தள அடையாளமாவது தென்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு எந்த அறிகுறியும் கிடைக்கவில்லை. கோட்டை கொத்தளம் என்பர். கோட்டையில்லாது போனாலும் மருந்துக் கொத்தளம் என்று இப்போது ஒரிடம் வழங்கப்படுவது கொண்டு கொத்தளம் இருந்தது உண்மையாகாதா? உண்மையே. துறைமுகப் பாதுகாப்பிற்கு அவ்வவ்வாட்சியாளரால் காவல்படை இருந்திருக் கும். அவர்க்குப் பயன்படும் மருந்து படைக்க மருந்துக் கொத் தளங்கள் இருந்தன. அவை மருந்துக் கொத்தளங்கள் தாமேயன்றி நால்வகைப் படைக்குரிய கொத்தளம் அன்று. 'யானைக்கட்டி முடுக்கு என்றோரிடம் இன்றும் வழங்கப்படுகிறதே எனலாம். கலங்களில் இறக்கப்பட்ட ஒன்றிரண்டு யானை கட்டி வைக்கப்பட்ட இடம் இதுவாகலாம். யானைப்படை கொண்ட படை வளாகம் அன்று. ஒரு முடுக்குதான்.

மேலே குறிக்கப்பட்ட மேலைக் கோட்டை வாயில், வடக்குக் கோட்டைவாயில், மருந்துக் கொத்தளம், யானைக் கட்டி முடுக்கு என்பன நாகர்பட்டினத்தின் நகர் அகத்துள் உள்ளன. தம்மை ஆட்சியின் அறிகுறித்தடயங்களாகத் தத்தம் பெயரளவால் கூறிக் கொண்டுள்ளன. வெளியே பாளையம்

நகர்க்கு - அதாவது பட்டின நகர்க்கு வெளியே வெளிப் ursuerub என்றொரு பகுதி உள்ளது. இது வடக்குக் கோட்டை வாயில் எல்லையை ஒட்டித் தொடங்கும் குடியிருப்பு. நகர் அகத்தின் வெளியே அமைந்த பாளையம் என்பது இதன் பொருள்.

'பாளையர் என்பார் கட்டிளமையுள்ள போர் வீரர்கள்; படை பயின்றவர்கள். அரசன் ஏவலின்படி போர் நேரின் பகைவரைத் தாக்க அமர்த்தப்படுபவர்கள். பாளையர் 'பாளையப்பட்டு என்றும் வழங்கப்பெறுவர். பாளையர் வாழுமிடம் பாளையம். இத்தகைய பாளையர் தலைநகரில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. பெரும்பகுதி ஆட்சிக்குரிய வேற்றிடங்களிலேயே அமைவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/85&oldid=584967" இலிருந்து மீள்விக்கப்பட்டது