பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இன்ப நீரோடை மாண்புமிகு நீதிபதி ச. மோகன் உயர் நீதிமன்றம், சென்னை. பொதுவாக பாடல்கள் உள்ளத் துடிப்பை எடுத்துக் காட்டுவதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பொருள் நயம் செறிந்தும் இருக்க வேண்டும். இவை இரண்டும் கலந்த எழில் உருவம் தான் பாடல்கள். இந்த அடிப்படை யிலே நான் திரு. நாச்சியப்பன் பாடல்களை ஊன்றிப் படித்தேன். ஒவ்வொரு பாடலும் பொருள் நயம் செறிந்து விளங்குகின்றது. அதே சம்யத்தில் புரட்சிக் கருத்துக்கள் இழையோடியிருக்கின்றன. - வேதனையில் வெந்த நெஞ்சத்தின் குமுறலும் ஏமாந் தார் சொத்தை ஏப்பமிடும் கூட்டத்தாரின் எக்களிப்பும் என்னை மிகவும் கவர்ந்தன. கொய்யாக் காதலில் மதத்தின் பேரால் இழைத்த கொடுமைகள் அருமையாக வர்ணிக்கப்படுகின்றது. "எழில்புரியில் புத்த மென்னும் எதிர்ச்சமயம் தன்னை மக்கள் தழுவிவரல் காணி ரோ? நீர் சிவபக்தர் தாமோ? சைவம் தழைக்கும்வழி ஈதோ? சற்றுச் சாற்று மெனக் கேட்டா ளுக்குப் "பிழைக்கும்வழி சமயஞ் செய்யும்! பேச்சுவிடு பொழிவாய் இன்பம்!”