பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நாச்சியப்பன் பழைய கரு புதிய நெறி பழைய கருக்களைக் கையிலெடுத்து பழந்தமிழ்ச் சொற்களையும் தொடர்களையும் பின்னிவிட்டு புதிய மறுமலர்ச்சி வேகத்தைக் குழைத்தெடுத்துப் புத்தாரம் பூட்டும் நிலை அந்நெறியில் காணும் போக்கு. கவிஞர் நாச்சியப்பன் அந்நெறியிலே அடியிட்டுச் செல்கிரு.ர். ஆயினும் புதிய காலத்தில் தோன்றியுள்ள பல மாற்றங்களே அவருடைய கவிதைக் கண் காணுமலில்லை; சீர்திருத்த மனம் சிந்திக்காமலில்லை. பாரதிதாசனின் புரட்சிக் குரலில் மின்னிய புத்தொளியின் வேகத்தை உணர்ந்த பின்னர் இன்றைய சமுதாயத்தின் மாற்றங்கள் சிலவற்றையும் கவிதை உலைக் களத்தில் இட்டுக் காய்ச்சி வடித்துத் தந்துள்ளார். - காதல் பாதை அமுதவல்லி செல்லத் துரையின் காதலைச் சோலையிலே சுதி எழப் பாடத் தொடங்கினுலும் இன்றைய நிலைக்கு ஏற்ப காதல் பாதை திரைப்பட அரங்கிற்குச் செல்லுகிறது. பெண்மையின் செயல்கள் திரையரங்கச் சூழலில் படமும், காதல் மடமும் இணைகின்ற வகையில் உருவாகின்றன. பாரதிதாசன் வழி சற்றும் சிதையாமல், ஈண்டுரைத்தல் காதல் இலக்கியத்திற் காகாதாம் என்று திரையிட்டு மறைத்து விடுகின்ருர் கவிஞர். காதல் காவலர் கண்காணிப்பால் காவல் நிலையத்திற்குச் செல்ல பெற்ருேர், அதிகாரிகள் கூடி நடத்திய பேச்சுகளால் இல் வாழ்க்கை மலர்கிறது. காதல் வாழ்வில் பொய்ம்மை புகுந்து திரையிட்டு மறைக்கும்போது மெய்ம்மை அறம் நல்வழி காட்டினல் பழைய அகவாழ்வு மலரும் என்ற அறிவு