பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியக்க மின்வெட்டு டாக்டர் தா. வே. வீராசாமி இணைப் பேராசிரியர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அடையாறு, சென்னை-600020 இருநெறி - கவிதை வெள்ளம் இருபதாம் நூற்ருண்டில் கரை புரண்டு ஓடியது. நாட்டு விடுதலை இயக்கத்துடன் சமுதாயச் சீர்திருத்த இயக்கமும் வீறுநடை இட்டுச் சென்றது. முன்னதன் பயணம் பாரதியின் வழியில் சென்றது என்ருல் பின்னது பாரதிதாசனின் வழியில் சென்றது, இரண்டின் இடைவெளி தொடக்கத்தில் சின்னஞ்சிறிதாக இருந்தாலும் வரலாற்றுப் பாதையிலே அவற்றின் வளர்ச்சி தனித்தனிக் கிளைகளாக வெளிப்பட்டுள்ளது. அவ்வளர்ச்சியில் சீர்திருத்த இயக்கத்தின் குரலைச் செவ்விய நெறியில் எடுத்துக் காட்டுவது நாச்சியப்பன் பாடல்கள்". புரட்சிக் கவியின் நெறி புரட்சிக் கவி என்ற பெயரைத் தாங்கி வெளிவந்த கவிதை நெறி எத்தனையோ மாந் தோப்பில் மணமாக, மணம் வீசிற்று. சஞ்சீவி பர்வதச் சார'வாய்ப் பொழிந்தது. "எதிர்பாராத முத்தமாய் இனித்தது. இத்தகைய புரட்சிக் கவியின் நெறி இனிய தென்றல் வடிவம் தாங்கி நாச்சி யப்பன் பாடல்களாய் உலா வரும்போது பாரதிதாசனின் பாநெறி பூவிரி காவிரியாய்ப் புதுப் பொருள் பல தாங்கிப் பழைய பண்பாட்டு முரசு கொட்டும் பாங்கினைக் கேட்க முடிகிறது.