பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நாச்சியப்பன் களாய் விளங்கினர். சொல்லியதைச் சொல்லிவிட்டேன்; செய்வதைச் செய்து கொள்’ என்ற நெறியில் கவிதை உலகம் சென்றது. ஆனல் இறைநெறி தலை எடுத்தவுடன் யாமார்க்கும் குடி அல்லோம் என்று பாடத் தொடங்கியது. அப்பாட்டின் எதிரடியாகக் கஜினி முகம்மதின் கை, இறை உருவங்களை உடைத்தெறிந்தது; கோவில்களை எல்லாம் தரைமட்ட மாக்கியது. எனினும் அக்கைக்குப் பர்தோசிக் கவிஞனின் கவிதையை அணிந்து கொள்ள ஆசை எழுந்ததை வெகு நாகரிகமாக நாச்சியப்பன் காட்டுகிருர், சீர்திருத்தக்கவி உள்ளம் கஜினியின் சமயத் தாக்குதலுக்கு முதலிடம் கொடுக்கிறது. கஜினியின் கை கோவிலையும் சிலையையும் இடித்த போது, நெற்றிக் கண் திறந்துறுத்துப் பார்த்ததாலே நீருளுன் என்னுமொரு கதையுமில்லை என்று அறிவியக்க மின்வெட்டைப் பாய்ச்சிவிட்டு பாலைவன கஜினி மனத்தில், கவிதைப் பசுமையின் ஏக்கத்தை மெள்ளெனத் திறந்து காட்டி காப்பியம் பாடச் செய்து அக்காப்பிய வரியிலெல்லாம் தன் புகழ் மணக்கும் வெல்லப் பாகினை வழிய விடுகிரு.ர். அதன் ஊடே செல்வத்தின் பற்றுள்ளம்’ படரும்போது கவிஞனை ஏமாற்றிப் பொன்னுக்கு வெள்ளிக் காசளித்த பெரும்பாவத்தைச் கட்டும்போது சமயக் காழ்ப்பெல்லாம் பொருளாசைப் பிடியில் சிக்கும் அரசு வாழ்வை அழியாமல் காட்டுகிருர் . இங்கு அரசைக் கவியுள்ளம் சபிக்கிறது. தடிபிடித்த கொள்ளையனை மன்னனென்று பாடிய தவறு கருதிக் கவிஞன் உயிர் காற்றில் பறக்கிறது. முடிவிலோ வியப்பிலாழ்த்திக் கொள்ளையின்பம் காண முயன்ருன் கஜினி என்ற எதிர்த் திருப்பத்தை அமைக்க முயன்று தோல்வியைத் தழுவுவதை ,