பாடல்கள் 5
செயலாற்றி வருபவர். பழந்தமிழ் நூல்களையும் பதிப்பித்து அவை மறைந்து விடாது காக்கும் செயல்புரிந்து வருபவர். அவர்கள் தம் ஆக்கப்பணிகளுக்கும் நிறுவனப் பணிகளுக்கும் இடையிலே நேரம் ஒதுக்கி, கடமை யுணர்வுடன் நூல் முழு தையும் படித்து, சிறந்த பகுதிகளை யெல்லாம் குறிப்பெடுத் துக்கொண்டு ஒர் அரிய ஆய்வுரையை வழங்கியிருக்கிரு.ர்கள். சிலம்பொலி செல்லப்பன் என் கல்லூரித் தோழர். அவருடைய ஆய்வுரையை நோக்கினல், அவர் எவ்வளவு ஈடுபட்டுப் படித்திருக்கிருர் என்பதையும், பிறர் மனங் கொண்டு சுவைக்குமாறு எவ்வளவு திறமையாக எடுத்துச் சொல்லும் ஆற்றல் பெற்றிருக்கிருர் என்பதையும் காண லாம். சிலம்பொலியார் தொட்ட கவிதை மணக்கும்; அவர் கையாளும் பாட்டு மெருகு ஏறிக் காட்சி பெறும்! தமிழ் இலக்கியச் செல்வங்களை யெல்லாம் மக்கள் மனத்தில் பரப்பி வரும் சிலம்பொலியார் என்னுடைய பாட்டுக்கும் விளக்க வுரை எழுதியிருக்கிரு.ர்.
தமிழண்ணல் டாக்டர் இராம பெரியகருப்பன் அவர்கள் சிறந்த தமிழ்க் கவிஞர். நான் பாட்டெழுதத் தொடங்கிய காலத்திலேயே தானும் பாட்டெழுதத் தொடங்கியவர். தம் அயராத உழைப்பாலும் முயற்சியாலும், இயல்பான ஆற்றலாலும் ஒரு பெரும் பேராசிரியராய்த் திகழ்பவர். ஆய்வுலகில் தலைசிறந்து விளங்கும் தமிழண்ணல் தம் கருத் துரையை வழங்கியிருக்கின்ருர்,
டாக்டர் பொன் கோதண்டராமன் அவர்களை அவருடைய மாணவர்கள் பொற்கோ என்று குறிப்பிடுவர். பொன் போன்ற நல்ல மனமுடைய அவர்கள், தம்பால் பயின்ற மாணவர்களையும் பொன் மணிகளாக்கிச் சுடர் விடச் செய்துவரும் ஆற்றலாளர். தமிழ் மொழி ஆய்வில், தலைசிறந்த இடம்பெற்றுத் திகழும் அவர்கள் என்பாடல்கள்
பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/7
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
