பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


72 நாச்சியப்பன் இடையில், முல்லையை மணக்க வேண்டும் என்ற ஒரு தலைக் காமத்தால், பொன்னப்பன், வெற்றித்தளபதி புயங்கனை மறைமுகமாகக் கொல்கிறான்! புயங்கனுக்குத் தன் மகளை மணம் முடிக்க எண்ணி இருந்த தஞ்சை மன்னர், பொன்னப்பனைப் புது மாப்பிள்ளை ஆக்க முடிவு செய்கிறார். மணநாள், மணநேரம் நெருங்குகிறது! தாமரை முத்தப்பனுடன் தஞ்சை திரும்புகிறாள். முல்லை முத்தப்பனுடன் கடாரக் கப்பலில் தப்புகிறாள். ஊடே, புயங்கனைக் கொன்றவன் பொன்னப்பனே என்ற உண்மை, அரசன் காதுக்கு எட்டுகிறது. பொன்னப்பன் சிறைப்படுகிறான்! நல்ல முடிவைக் கொண்ட கதை. ஆனால் அரிய கதை அன்று! முத்தப்பனின் நண்பன் பொன்னப்பனின் மன மாற்றத்திற்குரிய காரணம், பொன்னப்பன் தன் காதலி தாமரையைத் துறக்கக் காரணம், அர்சன் பொன்னப் பனைத் திடும் என ஏற்க, அவன் சொற்பேச்சைக் கேட்கக் காரணம், தவறேதும் செய்யாத தாமரையின் துன்ப எதிர் காலம் ஆகியவை விரிவாகச் சொல்லப்பட்டிருத்தல் வேண் டும்! கதையின் பாவிகம், சூழ்ச்சியின் வீழ்ச்சியா, நட்பா, காதலா,பேதைமையா எதுவெனத்தெரியவில்லை!ஏதேனும் ஒன்றை மையமாக வைத்துக் கதை வளர்க்கப்பட்டிருத்தல் வேண்டும். மனத்தில் எந்தப்பாத்திரமும் நிலைக்கவில்லை! காரணம். ஒரு பெருங்காவியத்திற் குரிய கதைக்கரு', சிறுபாவியத்திற்குள் அடங்க முடியாமல் தவிக்கிறது! தஞ்சை அரசனின் செயல்கள், அவனைப் பேதை மனோன் மணி சீவக மன்னனை விட மோசமாகக் காட்டுகின்றன! வல்லமையும் வீரமுங் கூர்மதி'யும் (ப. 190) அவனுக்கு இருப்பதாக நம்ப இயலவில்லை!