பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாடல்கள் '73 "நல்ல மனமுடையார், நல்ல செயலுடையார் வெல்லுவதே வைய விதி' என்ற கவிஞர்தம் வரி, தாமரை என்ற மதுரைவாழ் நல்ல மனமுடைய பெண்ணின் எதிர் காலத்திற்கும், புயங்கன் என்ற நல்ல செயலுடைய தளபதியின் கொலைக்கும் விடையிறுப்பதாக இல்லை! தடையளிப்பதாகவே இருக்கிறது! ஆனால் கதை அழகுற எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. சொல்லப்பட்டிருக்கிறது. ஓரிரண்டு சான்று. பொன்னப்பனின் காதல் மடலை வேலைக்காரி, அவன் காதலி தாமரையிடம் கொடுக்கிறாள். தாமரையோ, "தடிப்பயல்கள் கொடுப்பதெல்லாம் வாங்கி வந்தா என்னிடத்தில் தருகின்றாய் (ப. 139) என்று அவள் மீது பாய்கிறாள். கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்து எரிகிறாள்! பொன்னப்பன், தாமரை மீது கொண்டிருக்கும் காதல் ஒருதலைக் காமமோ என்று ஐயுறுகிறோம்! வேலைக்காரி அப்பால் செல்கிறாள். உடன், தாமரை, வேலைக்காரிக்குத் தெரியாமல், பத்து முறை கிழித்தெறிந்த துண்டை எல்லாம் (ப. 139) இணைத் தெடுத்துப் படித்துப் பார்க்கும் போது, தாமரையின் காதல் நெஞ்சம் எழிலுறப் புலப்பட்டு நிற்கிறது. இனிமை யுறப் புலப்படுத்தப்பட்டு நிற்கிறது. பொன்னப்பனுக்குத் தானும் ஒரு காதல் மடல் பதிலுக்கு எழுதி, அதனை வேலைக்காரியிடம் கொடுத்து, "உடன் சென்று கொடுத்திடுவாய்... - இன்னொரு கால் எழுது தற்கும் எண்ண வேண்டாம் என்றவனை எச்சரித்து வருவாய்” என்று தாமரை கூறும்போது, நம்முள் புன் சிரிப்பு புலர்கிறது! —E—