பக்கம்:நாடகக் கலை 1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நாடகக் கஐ. %. கலைவழி வலிமையுடையது, திறனுடையது என்று அழுத்தமாகக் கூறுகிருர். எனவே, வலிமை வாய்ந்த இந்தக் கலை வழியிலேயே,அறவழியிலேயே கலைஞர்கள் செயல்படவேண்டும். பண்டைக்காலத்தில் நடைபெற்று வந்த நாடகங். களே காம் பார்க்கும்போது இந்தக் கலைவழி எவ்வளவு சிறப்பாகக் கையாளப்பட்டு வந்திருக்கிறது என்பது: தெரிகிறது. காடக வகைகள் தமிழ நாடகங்களைப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். புராண நாடகம், இதிகாச நாடகம், வரலாற்று நாடகம், கற்பனை நாடகம், பக்தி நாடகம், இலட்சிய நாடகம், சமுதாய நாடகம், சமுதாயச் சீர்திருத்த நாடகம், தேசிய நாடகம், நகைச்சுவை நாடகம் என நாடகங்களை இவ்வாறு பலவகைப் படுத்திப் பார்க்க வேண்டும். இந்த நாடகங்களோடு பிரசார நாடகம் என்னும் ஒரு பிரிவையும் சேர்த்துக் கொள்ளலாம். சிவலிலா, கந்தலிலா, கிருஷ்ணலீலா, சக்திலீலா, பிரபுலிங்க லீலை, இராமாயணம், மகாபாரதம், தசாவ: தாரம், சாவித்திரி, சதியனு சூயா முதலியவை புராண இதிகாச நாடகங்கள். இமயத்தில் காம், தஞ்சை நாயக்கர் தாழ்வு, இராஜராஜ சோழன், வீரபாண்டியக் கட்டபொம்மன் முதலியவை வரலாற்று நாடகங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/130&oldid=1322676" இலிருந்து மீள்விக்கப்பட்டது