பக்கம்:நாடகக் கலை 1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ள்ாடகத்தில் பிரசாரம் 重2剑 வழிச்சென்று, அருளின் துணைகொண்டு ஆற்றும் கலப்பணிகள்தாம் உலகில் கின்று நிலைபெற்று ஒளிர்கின்றன. பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனர் அவர்கள் இவ்வாறு கூறுகிருர்: 'கலை மனத்தைப் பண்படுத்த உதவுவது. எங்கே லும் கலை மன அமைதியைக் கெடுத்துக் கவலையும் எககமும் பெருகுவதற்குக் காரணமாக இருக்குமானல் அங்கே மனிதன் விழிப்பாக இருக்கவேண்டும். உதவிக் கருவி எதிர்க்கும் கருவியாக மாறிவிடக் கூடாது. உண்ணும் உணவு உடலைக் கெடுக்கும் கஞ்சாக மாறக் கூடாது. எனவே, "கலை வழி, அறவழி' என்பதைக் கலைஞன் என்றும் மறத்தல் கூடாது’ மகாகவியின் வாக்கு மகாகவி பாரதியார் மகாத்மா காந்தியடிகளை வாழ்த்தும்போது தமது பாடலிலே போர்வழியைக் “கொலை வழியென்றும் அறவழியை "அருங்கலை வழி' யென்றும் குறிப்பிடுகிருர். 'பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாங் அதனிலும் திறன்பெரி துடைத்தாம் அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள் அறவழி யென்று நீ யறிந்தாய்’ என்று மகாகவி பாரதி சொல்லும்போது கமக்கு எத்தனை பெரிய உண்மை புலனுகிறது; மக்களைச் செயல்படுத்தும் வழிகளை இரண்டாகப் பிரித்து ஒரு வழியைக் கொலை வழியென்றும் மறருெரு வழியைக் கலவழியென்றும் கூறுகிறர். கொலை வழியைவிடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/129&oldid=1322675" இலிருந்து மீள்விக்கப்பட்டது