பக்கம்:நாடகக் கலை 1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 நாடகக் கலை இவ்விரு பெரியார்களுடைய அறிவுரைகளையும் என் அனுபவத்தையும் துணைகொண்டு பார்க்கும்போது, “கல்ல காடகம் என்ருல் அகத நாடகத்தில் மக்களுக்குத் தேவையான கருத்து: அக் கருத்தை உள்ளத்தில் பதியும்வண்ணம் அமைத்துள்ள காட்சிக் கட்டுக் கோப்பு; இவற்றேடு கதைப் பொருளை கன்கு வெளிப் படுத்தும் நடிகர்களும் அமையவேண்டும். இந்த மூன்று அம்சங்களும் சேரும்போதுதான் நல்ல நாடகம் மக் களுக்குக் கிடைக்கிறது. - நாடகத்தால் நாட்டுப் புரட்சி கண்ணுல் காணும்போது ஏற்படும் உணர்ச்சி, படிக்கும்பொழுதோ கேட்கும்பொழுதோ ஏற்படுவ தில்லை. மனித சமூகத்தின் நன்மைக்குரிய பொருள் க2ள கெஞ்சில் பதியவைப்பதற்கு நாடகத்தைவிடச் சிறந்த சாதனம் கிடையாது. பொது கன்மைக்கான கருத்துகளைக் கட்டுரையாகவோ கதையாகவோ சொல்லுவதைவிட, இசையோடு பாடுவதைவிட, நாடக மாக கடித்துக் காட்டுவது கல்ல பயனைத் தரும். மேலே காடுகளில் கடைபெற்ற அநேக அரசியல் புரட்சிகளுக்கு அந்த நாட்டு நாடக மேடைகள் பேருதவியாக இருந்திருக்கின்றன. எங்கள் நாடகக் குழு வில் நாங்கள் கடித்துவந்த கதரின் வெற்றி, தேசபக்தி போன்ற நாடகங்களும், கவியின் கனவு, இன்பசாகரன் ஆகிய தேசிய காடகங்களும் எத்தனை எத்தனையோ ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களைச் சுதந்திர இயக்கத்தில் குதிக்கச் செய்திருக்கின்றன; விடுதலை வெறியூட்டியிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/142&oldid=1322688" இலிருந்து மீள்விக்கப்பட்டது