பக்கம்:நாடகக் கலை 1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 61 விளைவாகத்தான் கிரந்தரமாக நடைபெற்று வந்த எங்கள் குழுவைப் போன்ற பல நாடக சபைகள் மூடு விழாக் கொண்டாட நேர்ந்தன. நாடகக் கழக உதயம் 1950-ல் சென்னையில் காடகக் கழகம் என்னும் பெய ரால் ஒரு நிறுவனம் தோன்றியது. இந்தக் கழகத்தில் நடிகர்கள், நாடகாசிரியர்கள், காடகத் தொழிலாளர்கள், அமெச்சூர்கள், ரசிகர்கள் எல்லோரும் அங்கம் வகித் தார்கள். அரசாங்கத்தார் விதித்த கேளிக்கை வரியால் காடக சபைகள் நடைபெறுவது மிகவும் இக்கட்டாக விருந்தது. இதற்காக காங்கள் தனியே விடுத்த வேண்டுகோளெல்லாம் பயனற்றுப் போய்விட்டன. நாடகக் கழகத்திற்கு முதல் இரண்டாண்டுகள் கான் தலை வராக இருந்தேன். அப்போது நிறுவன வழியாக எங்கள் குறைகளை அரசாங்கத்திற்கு எடுத்துச் சொன் னுேம். பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் தலைமை யில் தூது குழுவொன்று அமைச்சர்களை கேரில் கண்டு நாடகம் நடத்துவோரின் குறைகளே எடுத்துரைத்தது. நாடக அரங்குகள் இல்லாத குறையைப் போக்கத் திறந்தவெளி அரங்குகள் ஏற்படுத்தி நாடகக் கழகத்தின் சார்பில், தொழில் முறை நாடக சபைகளும், அமெச்சூர் சபைகளும் கூட்டாக இரு பெருங் கலை விழாக்களை கடத்தின. அதில், ஐயாயிரம் காற்காலிகள் போட்டு இரண்டு வகுப்பாகப் பிரித்து முதல் வகுப்பு எட்டன வாகவும், இரண்டாவது வகுப்பு நான்களுவாகவும் குறைந்த கட்டணம் வைத்து காடகங்களை கடத்தி மத்திய சர்க்கார் அமைச்சர்களையும் அழைத்து வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/63&oldid=1322596" இலிருந்து மீள்விக்கப்பட்டது