பக்கம்:நாடகக் கலை 1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ブ学Q காடகக் கலை உணர்ச்சியும் இயல்பாகவே உண்டாகிறது, இந்த விளையாட்டுகளிலே ஒருவரைப்போல் மற்ருெருவர் நடித்துக் காட்டுவது ஓர் அற்புதமான விளையாட் டல்லவா? எல்லா உயிரினங்களுக்கும் நடிப்பு உண்டு இந்த விளையாட்டு உணர்ச்சி கம்மைப் போன்ற மனிதர்களுக்கு மட்டுமன்று; எல்லா உயிரினங்களுக் கும் இருக்கிறது. பறவைகளும், விலங்குகளும் கூட விளையாடி மகிழ்வதை நாம் பார்க்கிருேம். நம்முடைய வீட்டிலே காய்க்குட்டி இருக்கிறது. அது கம்மோடு விளையாடுகிறது. அப்போது காயின் கூரிய பற்கள் கம் கையில் படுவதில்லை. கடிப்பதுபோல் கடித்து விளையாடுகிறது. சீறிப் பிராண்டும் பூனைக் குட்டியோடு கம் குழந்தைகள் பயமின்றி விளையாடுகின்றன!... தனது கூரிய நகங்களை உள்ளடக்கிக் கொண்டு அது எவ்வளவு அற்புதமாக விளையாடுகிறது! அது நடிப் பல்லவா? குழந்தைகளின் நடிப்பு அதுபோகட்டும்; பெரியவர்கள் கலியாணம் செய்து கொள்வதைப் பார்த்துக் குழந்தைகள் மரப்பாச்சிக் கலியாணம் செய்து விளையாடுவதை நீங்கள் பார்த்திருக் கிறிர்கள் அல்லவா? தாய்மார்கள் சோறு சமைப்பதை யும் பரிமாறுவதையும் பார்த்துக் குழந்தைகள் என்ன செய்கின்றன? விளையாட்டுச் சாமான்களை வைத்துக் கொண்டு, புழுதி மண்ணை அள்ளிப்போட்டுச்சோருக்கிப் .பரிமாறிச் சாப்பிட்டு விளையாடுவதை நாம் எத்தனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/71&oldid=1322604" இலிருந்து மீள்விக்கப்பட்டது