பக்கம்:நாடகக் கலை 1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நாடகக் க9ல தெரியவேண்டும். இவ்விதக் குரல் பயிற்சியில்லாதவர் கள் சிறந்த நடிகர்களாக இருந்தும்கூட வானெலி காட கங்களிலே படுதோல்வி அடைகிறர்கள். கேட்கும் காடகமாக இருப்பதால் வானுெலி இப்படிப்பட்டவர்களை மிக எளிதாகக் காட்டிக் கொடுத்து விடுகிறது. எனவே பல்வேறுபட்ட உணர்ச்சிகளை எளிதாகக் காட்டக் குரல் பயிற்சி மிகவும் முக்கியம். அதிலும் சிறப்பாக, ரகசியம் பேசுவதற்குக் குரல் பயிற்சி மேடைக்கு மிகவும் தேவை. சில நேரங்களில் கடி கர், சபைக்குக் கேட்கும்படியாகவே ரகசியம் பேச வேண்டியிருக்கும். மனேகரன் நாடகத்தில் அந்த மாதிரிப் பல கட்டங்கள் உண்டு. சபைக்கும் கேட்க வேண்டும்; அதுவே ரகசியமாகச் சொல்லுவது போல வும் இருக்கவேண்டும். இதற்குக் குரல் பயிற்சி இல்லாவிட்டால் முடியாது. தெளிவான பேச்சு அடுத்தபடியாகப் பேச்சிலே தெளிவு இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலே பிறந்தவர்களுக் கும் ஒவ்வொரு விதமான பேச்சு இருக்கிறது. இதை ஒழுங்கு செய்துகொள்ள வேண்டியது அவசியம், இல்லையானுல் உணர்ச்சி, நடிப்புத் திறமை, குரல்வளம் எல்லாவற்றையும் இந்தத் தெளிவு இல்லாத பேச்சுக் கெடுத்துவிடும். உணர்ச்சி பாவத்தோடு அற்புதமாக கடிப்பான் ஒரு கடிகன்; வார்த்தைகளைக் கொலை செய் வான்!. ‘என்ன சொன்னுய்? என்பதை எண்ண சொண்ணுய்? என்பான். கண்ணே என்ளுேடு பேச மாட்டாயா? என்றிருக்கும். இவன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/81&oldid=1322616" இலிருந்து மீள்விக்கப்பட்டது