பக்கம்:நாடகக் கலை 2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

போதும் சபையோரின் கண்கள் முக்கியமான பாத் திரங்களுடன் ஒன்றி நிற்கும்போது, தனியே ஒரு புறம் நிற்கும் நடிகர் வேறு தனிக் குறும்புகள் எதுவும் செய்யக்கூடாது. அப்படிச் செய்வது காட்சியின் உணர்ச்சியையே கெடுத்துவிடும்.

நடிகன் தனக்குக் கொடுக்கப்பட்ட பாடத்தை எப்படியும் நெட்டுருப் போட்டு விடவேண்டும். பாடம் சரியில்லையாளுல் நடிப்பே வராது. இது என் சொந்த அனுபவம். சரியாகப் பாடம் செய்யாத நடிகன் எவ்வளவு சிறந்த நடிகனுயிருந்தாலும் பயனில்லை. அவன் மேடையில் வெற்றி பெற முடியாது.

நாடக ஒத்திகை

நாடக ஒத்திகை நேரங்களில் குறித்தபடி தவருது வந்து ஒத்திகையில் கலந்து கொள்ளவேண்டும். நடிகன் பாடத்தை நெட்டுருப் போடுவதற்கும் நன்ருகப் பயிற்சி பெறுவதற்கும் ஒத்திகை மிகவும் அவசியம். மேடையில் எப்படி நடிக்க வேண்டுமென்று நடிகன் எண்ணுகிருளுே அப்படியே ஒத்திகையில் நடித்துப் பழகவேண்டும். சில நடிகர்கள் ஒத்திகையில் சரியாக நடிக்க மாட்டார்கள். எல்லாம் மேடையில் நடித்து விடலாம் என்று அலட்சியமாக இருப்பார்கள். பெரும் பாலும், இப்படி அலட்சியமாக இருப்பவர்கள்தான் மேடையில் வந்து குளறி விடுவது வழக்கம். நாட கத்தை உருவாக்குமிடம் ஒத்திகை. இந்த இடத்தில் நடிகன் சிரத்தையோடு பூரணமாக ஒத்துழைத்து வெற்றி பெற வேண்டும்.

கம்ப நாடகம் j

இறுதியாக நடிகனுக்கு நூலறிவு வேண்டும்; நடிப்பு வளரப் படிப்பு வேண்டும். புராண, இதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/105&oldid=1322471" இலிருந்து மீள்விக்கப்பட்டது