பக்கம்:நாடகக் கலை 2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

போல் வீழ்ந்து விடவுமில்லை; வியர்த்தானல்லன் - அவனது உடம்பில் வியர்வைத் துளிகளும் தோன்ற வில்லை; ஆல்ை, இராமனுக்கு அப்போது ஏற்பட் டுள்ள துன்பத்தையெல்லாம் அமரர்களும் அறியமாட் டார்கள்......என்கிருர் கம்பர். பேச்சு மூச்சற்றுத் திகைத்துச் சித்திரம் போல நின்ருன் இராமன்' என்பது இங்குள்ள நடிப்புக்குறிப்பு. பிரமை பிடித்தவன் போல் சில விநாடிகள் நின்ருன் இராமன் என்பதை நாம் இதி விருந்து அறிந்து கொள்ள முடிகிறதல்லவா?......

குறள் தரும் நாடகம்

திருக்குறள் காமத்துப்பால் முழுவதையும் வள்ளு வர் பெருமான் நமக்கு நாடகமாகவே தந்துள்ளார். அவை நடிகருக்கு மிகவும் பயனளிக்கும். ஒன்று சொல்லுகிறேன்.

காதலியும் காதலனும் சந்திக்கிருர்கள்; காதலன் காதலியைப் பார்க்கிருன். காதலி நிலத்தைப் பார்த்த படி நிற்கிருள். காதலன் பார்க்காத சமயம் காதலி அவனை ஏறிட்டுப் பார்த்து மெல்லச் சிரிக்கிருளாம். குறள் எவ்வளவு அழகாக இருக்கிறது:

  • யாகுேக்கும் காலை நிலநோக்கும் நோக்காக்கால்

தாளுேக்கி மெல்ல தகும்."

இவ்வாறு எவ்வளவோ நடிப்புச் செல்வங்கள் நம் இலக்கியங்களில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் நீங்கள் நன்கு கற்றறிந்து சிறந்த நடிகமணிகளாகத் திகழவேண்டும்.

நடிகனின் பண்பு

ஒரு நல்ல நடிகன் தன் நடிப்பில் எப்போதும் நிறைவு காண மாட்டான். எவ்வளவு சிறப்பாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/107&oldid=1322473" இலிருந்து மீள்விக்கப்பட்டது