பக்கம்:நாடகக் கலை 2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

சிவலீலா, கந்தலீலா கிருஷ்ணலீலா, சக்திலீலா, பிரபுலிங்க லீலை, இராமாயணம், மகாபாரதம், தசாவ தாரம், சாவித்திரி, சதியனுசூயா முதலியவை புராண

இதிகாச நாடகங்கள்.

இமயத்தில் நாம், தஞ்சை நாயக்கர் தாழ்வு, இராஜ ராஜ சோழன், வீரபாண்டியக் கட்டபொம்மன், முதலியவை வரலாற்று நாடகங்கள்.

மனேகரன், இரண்டு நண்பர்கள், லீலாவதி சுலோச,ை வேதாள உலகம் இவற்றையெல்லாம் கற்பனை நாடகமாகக் கொள்ளலாம்.

இராமதாஸ், பிரகலாதன், துருவன், சிறுத் தொண்டர், மார்க்கண்டேயர், நந்தனர் முதலிய நாடகங்கள் பக்தி நாடகங்கள் என்னும் பிரிவில் சேர்ந்தவை.

தான் போற்றிவரும் குறிப்பிட்ட ஒரு இலட்சியத் திற்காக இறுதிவரை போராடி வெற்றிபெறும் ஹரிச் சந்திரா போன்ற நாடகங்கள் இலட்சிய நாடகம் என்ற வகையில் அடங்கும்.

டம்பாச்சாரி, இராஜாம்பாள், இராஜேந்திரா, மோகன சுந்தரம், மேனகா, பம்பாய் மெயில், வித்தியா சாகரர், நாலு வேலி நிலம், மல்லியம் மங்களம், உயிரோவியம், வேலைக்காரி முதலியவை சமுதாய நாடகங்கள்.

அந்தமான் கைதி, முள்ளில் ரோஜா, பைத்தியக் காரன், இழந்த காதல், இரத்தக் கண்ணிர், மனிதன், வாழ்வில் இன்பம், பெண் முதலியவை சமுதாயச் சீர்திருத்த நாடகங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/128&oldid=1322499" இலிருந்து மீள்விக்கப்பட்டது