பக்கம்:நாடகக் கலை 2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞரின் பாராட்டுக் கடிதம்

பல்கலைக் கழகத்தில் தாங்கள் ஆற்றியுள்ள சொற் பொழிவுகள், சரியான தரத்தில் தயாரிக்கப்பட்டவை தாம். நடிப்புக்கலை” என்ற தலைப்பின் கீழ் அழகாயும், ஆழ்ந்தவையாவும் உள்ள உண்மைகள் பலவற்றை வழங்கியிருப்பது பாராட்டத்தக்கது. கலை கலைக் காகவே' என்பதன் பொருளற்ற தன்மையை விளக்கி யிருப்பதும், போற்றக்தக்கதாய் அமைந்திருக்கின்றது. நாடகத்தில் பிரசாரம் என்பதில் புகுத்தியுள்ள அருமை யான கருத்துக்களை நான் மிகவும் கொண்டாடுகிறேன். மனத்தை மென்மைப்படுத்தும் அளவில் நாடகத்தின் உட்கருத்தும், உபதேசமும் அமைவதை வற்புறுத்தி யிருப்பது மெச்சத்தக்கது.

கேவலம் பொழுது போக்கிற்காகவே, நாடகத்தை ரசிக்கும் பழக்கம் வர வர அதிகமாகி வரும் நாட்களில், இவ்விதம் சொல்வதை நான் மனமார வரவேற்கிறேன். “The Play is the thing” arsirp ?(5 sel,ârflsvă Găreb உண்டு. அதன் கருத்தாவது, எவ்விதமான படைப் பாயினும், அதனுள் பொதிந்த உட்செல்வம் இதய வளர்ச்சிக்கு உகந்ததாக இருப்பதாம். இதனை மறக் காமல் பலவிதமாக நீங்கள் அழுத்தி அழுத்தி, உரைத் திருப்பதை மிகவும் நான் ரசித்தேன்.

'ஸஹிருதயா' கி. சந்திரசேகரன். M.A., B.L. டாக்டர் ரங்காச்சாரி வீதி. தாகூர்ப் பேராசிரியர்

சென்&ன.4. சென்னைப் பல்கலைக் கழகம்

28-1 i -84.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/13&oldid=1322368" இலிருந்து மீள்விக்கப்பட்டது