பக்கம்:நாடகக் கலை 2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

இளைஞன் ஒருவன் அம்புபட்டு மெய் நோக அலறித் துடிப்பதைக் கண்டு அரசன், தான் அறி யாமல் செய்த குற்றத்தை மன்னிக்கும்படியாக மன்ருடினன். மரணத் தருவாயிலிருந்த அ ந் த இளைஞன், ஐயா, நீங்கள் தெரியாமல் செய்ததை நான் மன்னித்து விட்டேன். என் உயிர் பிரியப் போகிறது. இந்த சமயத்தில் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்' என்று அரசனை வேண்டினன்.

கதாகத்திற்குத் தண்ணிர் வேண்டுமென்று கேட்ட என் வயது முதிர்ந்த தாயும் தந்தையும் சிறிது தூரத் தில் இருக்கிருர்கள். அவர்கள் கண் தெரியாதவர்கள்; நடக்கவும் முடியாதவர்கள். அவர்களுக்குக் கொஞ் சம் தண்ணிர் கொண்டு போய்க் கொடுத்து அவர்கள் தாகத்தைச் சாந்தி செய்யுங்கள். அவர்கள் தண்ணி ரைக் குடிக்கு முன் எதுவும் பேச வேண்டாம்; நான் இறந்துவிட்ட சேதியைத் தண்ணீர் குடித்த பின் சொல்லுங்கள்" என்று கூறித் தன் உயிரைவிட்டான்.

இந்தக் கதை இராமாயணத்தோடு ஒட்டிய ஒரு பழைய கதைதான். சாகும் தருவாயிலும் பெற்றவர் களுக்குத் தனது கடமையைச் செய்த இப்பேர்ப்பட்ட நல்ல இளைஞர்களின் கதையை நாடகமாக நடித்துக் காட்டில்ை சிறுவர்களுக்கு எவ்வளவு நன்மை ஏற்படும்? ~. !

நாடகத்தில் பிரசாரம் என்ருல் இதைப் போன்ற நல்ல எண்ணங்களை மனத்தில் பதிய வைக்க வேண்டும்.

பிரசாரம் என்ருல் என்ன?

பிரசாரம் என்பதற்குப் பொருள், ஒரு கருத்தை அல்லது கொள்கையைத் திரும்பத் திரும்ப எடுத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/149&oldid=1322521" இலிருந்து மீள்விக்கப்பட்டது