பக்கம்:நாடகக் கலை 2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

நாடகம் என்றால் என்னவென்பது உங்களுக்குத் தெரியும். உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். எனவே, நாடகக் கலை என்பதைப்பற்றி உங்களுக்கு விளக்குவதற்காக நான் இங்கே இலக்கிய ஆராய்ச்சி எதுவும் நடத்தப் போவதில்லை.

நாடு - அகம் = நாடகம், நாட்டை அகத்தில் கொண் டது நாடகம். அதாவது, நாட்டின் சென்ற காலத் தையும் நிகழ் காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால் நாடு - அகம் - நாடகம் என்று பெயர் பெற்றிருக்கிறது. நாடு-அகம். அதாவது, அகம் - நாடு; உன்னுள் நோக்கு; உன்னையுணர்; அகத்தை நாடு, என்றெல்லாம் பலவிதமாக அறி ஞர்கள் இதற்குப் பொருள் கூறுவார்கள்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் நாடகம் 'உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடி' என்பது முற்றிலும் பொருந்தும்.

ஏன் தோன்றியது

இந்த நாடகக் கலை ஏன் தோன்றியது? எப்படித் தோன்றியது? எங்கிருந்து வந்தது? இதன் வரலாறு என்ன? என்பன போன்ற விஷயங்கள் எல்லாம் உங்களில் சிலருக்குத் தெரியாதிருக்கலாம். அவற்றைத் தான் இப்போது சொல்லப் போகிறேன்.

சாதாரணமாக நாம் வெளியே போகும்போது எத்தனையோ காட்சிகளைப் பார்க்கிறோம்; ரசிக்கிறோம். அப்படி நாம் பார்த்து மகிழ்ந்த காட்சிகளிற் சில மறக்க முடியாதபடி நம் மனத்திலும் பதிந்து விடுகின்றன. அவ்வாறு நம் மனத்தில் பதிந்துவிட்ட அந்த அழகான காட்சியை நல்ல ஓவியக் கலைஞன் ஒருவன் சித்திரத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/19&oldid=1540100" இலிருந்து மீள்விக்கப்பட்டது