பக்கம்:நாடகக் கலை 2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

திலே தீட்டிக்கொண்டு வருகிறான்; அந்தச் சித் திரத்தை நாம் பார்க்கும்போது நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகிறது? கண் முன்னால் கண்டு களித்த ஒரு பெரிய காட்சி முழுதும் சின்னஞ்சிறு சித்திரத்தில் ஒடுங்கி விட்டதைக் கண்டு ரசிக்கிறோம் அல்லவா?

உங்கள் தம்பி, தங்கை அல்லது பாப்பா தினமும் உங்கள் முன்னால் சிரித்து விளையாடிக் கொண்டிருக் கிறது. அப்பா, அம்மா எல்லோரும் பார்க்கிறார்கள்; நீங்களும் பார்க்கிறீர்கள். மகிழ்ச்சி அடைகிறீர்கள். இல்லையா?......அந்தத் தம்பியையோ தங்கையையோ அல்லது பாப்பாவையோ புகைப்படம் எடுத்து அந்தப் புகைப் படத்தைக் கையிலே வைத்துக்கொண்டு பார்க்கும்போது உங்களுக்கு எவ்வளவு ஆனந்தம் உண்டாகிறது?

இன்னொன்று பாருங்கள்; கடைவீதிகளில் பழக் கடைகளை அனேகர் பார்த்திருப்பீர்கள். வாழை, மா, மாதுளை, பலா முதலிய பலவகையான பழங்கள் கடை களில் இருக்கும். அந்தப் பழங்களை யாரும் அதிசயத் தோடு பார்த்துக்கொண்டிருப்பதில்லை. ஆனால் பழங்களைப் போல மண்ணாலோ, காகிதத்தாலோ செய்து வர்ணம் பூசிக் கடைகளில் வைத்திருக்கிறார்களே, அவற்றைப் பார்த்து அதிசயப்படுகிறோம். 'அடடா மண்ணால் செய்தது மாம்பழம் போல் இருக்கிறதே' என்று பார்த்துப் பார்த்துப் பரவசம் அடைகிறோம் அல்லவா?

இப்படி நேரில் கண்ட ஒரு அழகிய காட்சியைச் சித்திரத்திலே காணும்போதும், தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் நம் வீட்டிலுள்ள பாப்பாவைப் புகைப்படத்திலே பார்க்கும் போதும் உண்மையான பழங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/20&oldid=1540101" இலிருந்து மீள்விக்கப்பட்டது