பக்கம்:நாடகக் கலை 2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

களைப் பார்ப்பதைவிடப் பழங்கள் போலச் செய்தன வற்றைப் பார்க்கும் போதும் நமக்கு ஒரு தனி இன்பம், மகிழ்ச்சி ஏன் ஏற்படுகின்றது? இந்த உணர்ச்சிக்குக் காரணம் என்ன? அதே காரணத்தால்தான் நாடகமும் தோன்றியிருக்க வேண்டும். இதுவே அறிஞர்களின் கருத்து.

மூவகை உணர்ச்சிகள்

மனிதனுக்கு மூன்று உணர்ச்சிகள் உண்டா கின்றன. ஒன்று பசி உணர்ச்சி. இரண்டாவது ஆண்- பெண் - பால் உணர்ச்சி. மூன்றாவது விளையாட்டு உணர்ச்சி. உண்டாகின்றன இந்த உணர்ச்சிகள் இயல்பாகவே விளையாட்டு உணர்ச்சிகளில் பிறர் செய்வதைப் போல் நாமும் செய்து காட்ட வேண்டுமென்ற உணர்ச்சி குழந்தைப் பருவம் முதலே நம்மிடம் இருந்து வருகிறது. இந்த விளையாட்டுணர்ச்சியிலிருந்து எழுந்ததுதான் நாடகம்.

மரப்பாவைக் கூத்து; பொம்மலாட்டம்

இவ்வாறு இயல்பாக எவ்லோருக்கும் ஏற்படும் விளையாட்டுணர்ச்சி பண்டைக் காலத்தில் இருந்த நம்முடைய பெரியவர்களுக்கும் ஏற்பட்டது. முதலில் மரத்தால் செய்த பாவைகளை வைத்துக் கொண்டு ஓடியாடி விளையாடச் செய்தார்கள். அதற்கு 'மரப் பரவைக்கூத்து' என்று பெயர் வைத்தார்கள். பிறகு அதிலே கொஞ்சம் வளர்ச்சி ஏற்பட்டது. மண்ணாலும், துணியாலும் மனிதர்களைப்போல் அழகான பொம்மை களைச் செய்து அந்தப் பொம்மைகளின் கை, கால், தலை முதலிய உறுப்புகளைக் கயிற்றால் கட்டிப் பின்னால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/21&oldid=1540102" இலிருந்து மீள்விக்கப்பட்டது