பக்கம்:நாடகக் கலை 2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

விலாசங்கள்

இத்தகைய நாடக காலத்திற்குப் பிறகு நாடகத்திற்கு விலாசம் என்று பெயரிட்டுப் பல விலாசங்கள் தமிழகத்தில் நடைபெற்று வந்திருக்கின்றன. பாரத விலாசம், சகுந்தலை விலாசம், மதன சுந்தரப் பிரசாத சந்தான விலாசம், மதுரை வீரன் விலாசம், சித்திராங்கி விலாசம், அரிச்சந்திர விலாசம், தேசிங்குராஜ விலாசம், மன்மத விலாசம், இவ்வாறு பல விலாசங்கள். இந்த 'விலாசம்' என்ற பெயர் நாடகத்திற்கு ஏன் வந்தது என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

'விலாசம்' என்ற பெயருக்கு ஆதி காரணமாக விளங்கியது ஏழாம் நூற்ருண்டில் மகேந்திர பல்லவன் எழுதிய 'மத்த விலாசம்' என்னும் நாடகம் என்று கருதலாம.

'விலாசம்' என்ற பெயரால் நாடகம் நடை பெற்றபோதுதான், நடிகர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சொந்தமாகவே வசனம் பேசவும் தொடங்கினார்.

சமுதாய நாடகத் தோற்றம்

சமுதாய சம்பந்தமான நாடகங்கள் சமீப காலத் தில்தான் தோன்றியனவாகச் சிலர் எண்ணுகிருர்கள். அது தவறு. பல ஆண்டுகளுக்கு முன்பே சமுதாய நாடகங்களும் நடந்திருக்கின்றன. முதன் முதலாக மேடையில் நடிக்கப்பட்ட சமுதாய நாடகம் 'டம்பாச் சாதி விலாசம் என்பதாகும். இந் நாடகத்தை எழுதியவர் திரு. காசிவிசுவகாத முதலியார் என்பவர். இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/34&oldid=1540271" இலிருந்து மீள்விக்கப்பட்டது