பக்கம்:நாடகக் கலை 2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

காப்பியக் கதைகளையும் சுவாமிகள் நாடகமாக்கி இருக்கிறார்.

சுவாமிகள் எழுதிய அத்தனை நாடகங்களும் அரங்கில் ஆயிரக்கணக்கில் நடிக்கப் பெற்றவையென்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பாடல் வகைகள்

சுவாமிகளின் நாடகங்களில் வெண்பா, கலித் துறை, விருத்தம், சந்தம், சிந்து, வண்ணம், ஓரடி, கும்மி, கலிவெண்பா, தாழிசை, கீர்த்தனை இப்படிப் பலவகைப்பட்ட பாடல்களும் சிறு பகுதி உரையாடல்களும் நிறைந்திருக்கும். அப்போது உரைநடை அதிகமாக வராத காலமாதலால், பெரும் பகுதி பாடல் களாகவே யிருக்கும்.

இப்பொழுதெல்லாம் அந்த நாடகங்களை நீங்கள் பார்க்க நேர்ந்தால், 'என்னையா! எடுத்ததற்கெல்லாம் பாட்டுத்தானா?' என்று கேட்பீர்கள். நாடகங்களில் பாட்டு மிகக் குறைவாக இருக்க வேண்டுமென்று கருதப்பெறும் காலம் இது. நாங்கள் நாடகத் துறை யில் புகுந்த காலத்தில் அப்படியெல்லாம் இல்லை. ஒரு நாடகத்தில் குறைந்தது நூறு பாடல்களாவது இருக்கும். தர்க்கப் பாடல்கள் மிக அதிகம். இந்த நாள் நாடகங்களைப் போல் மேடையில் நடிப்பவர்க் காக மறைவில் இன்னொருவர் இருந்து பாடும் 'இரவல் குரல்' வழக்கம் எல்லாம் இல்லை. சுவாமிகளின் நாடகப் பாடல்களை நாங்களேதான் பாடுவோம்.

சிரித்தாலும் பாட்டு, அழுதாலும் பாட்டு, கோபித் தாலும் பாட்டு, சண்டை போட்டாலும் பாட்டு, ஒரு வருக்கொருவர் பேசிக் கொள்ளுவதும் எல்லாம் பாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/40&oldid=1540575" இலிருந்து மீள்விக்கப்பட்டது