பக்கம்:நாடகக் கலை 2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

மயந்தான். உரையாடல்கள் பெரும்பாலும் பாட்டின் பொருளை விளக்குவதாகவே யிருக்கும். எங்காவது ஒரு சில இடங்களில் நீண்ட வசனங்கள் பேசப்படும்.

அந்நாளில் நடைபெற்ற வேறு சில நாடகங்களில் நான் பார்த்திருக்கிறேன்: ஒருவருக்கும் தெரியாமல் ஒளிந்து மறைந்து கொள்ளையடிக்க வரும் திருடன் கூடக் காலில் சலங்கை கட்டிக்கொண்டு, ஆடிப்பாடி, ஆர்ப்பாட்டத்தோடு வருவான்! சதாரம், அதிருப அமராவதி ஆகிய நாடகங்களில் திருடன் வேடத்திற்கென்றே சில நட்சத்திர நடிகர்கள் இருந்தார்கள். அவர்கள் நடிக்கிறார்கள் என்றால் அந்தக் காலத்தில் அபாரமான வசூலும் ஆதரவும் இருந்தன. அவர்களில் பிரசித்தி பெற்றவர் திரு. கடராஜ ஆச்சாரி என்பவர். அவருக்குப் போட்டியாகத் திரு. தங்கவேலுப் பிள்ளை என்று ஒருவர் இருந்திருக்கிறார். இந்தத் திருட வேடதாரிகளுக்குள் போட்டா போட்டி வைத்துச் சதாரம் நாடகம் நடைபெறும். இந்தப் போட்டி ஆட்டத்தைப் பார்க்க மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள். சில சமயங்களில் பெண்களும் திருடர்களாக நடிப்பது உண்டு.


மனம் போல் வசனம்

ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழ் நாடக மேடையில் உரைநடை தலைகாட்டத் தொடங்கியது. நடிகர்கள் தாமாகவே பாடல்களின் கருத்தை ஒட்டி இரண்டு வரி வசனமும் பேசி விடுவரர்கள். நல்ல தமிழறிவும் கற்பனைத் திறனும் வாய்ந்த சில நடிகர்கள் ஒருபடி மேலே போய், கதைக்குப் புறம்பாகவும் சற்று நீண்ட வசனங்களைப் பேசத் தொடங்கினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/41&oldid=1540576" இலிருந்து மீள்விக்கப்பட்டது