பக்கம்:நாடகக் கலை 2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

இப்படியெல்லாம் சபையோர் எண்ணத் தொடங் கில்ை நாடகத்தின் நிலையென்ன? அந்தப் பாத்திரத் தின் கதியென்ன? உயிரற்ற கண்கள்

சில நடிகர்களுக்குப் பேச்சுத் தெளிவு பிரமாதமாக இருக்கும், தோற்றமெல்லாம் அபாரமாக இருக்கும். பேச்சிலே உணர்ச்சியும் இருக்கும். ஆனல், கண் களில் மாத்திரம் எந்தவிதமான பாவமும் இராது. கோபம், சோகம், சிரிப்பு, வெறுப்பு எல்லாம் குரலில் தெரியும்; கண்கள் மாத்திரம் திருதிருவென்று விழித்த படியேயிருக்கும். என்ன செய்வது?

அடுத்தது காட்டும் பளிங்கு போல்நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்" என்ருர் வள்ளுவப் பெருமான். எண்சாண் உடம் புக்குச் சிரசே பிரதானம்; அதில் முக்கிய உறுப்பு கண். நடிப்பில் உயிர் வேண்டுமா? பாவம் கண்ணில் தெரிய வேண்டும். நான் முன்பு சொன்னபடி கண்களும் பேச வேண்டும். விருப்பையும், வெறுப்பையும் கண் களே காட்டிவிடும். .#

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்’

என்று வள்ளுவர் பெருந்தகை எவ்வளவு அருமை யாகச் சொல்லியிருக்கிருர். அவர் எதைத்தான் சொல்லவில்லை! கண்களில் பாவம் காட்டாமல் நடிப் பது மகாபாவம். அந்த நடிகனைப் பார்க்க சபையோ ருக்கும் பாவமாய்த்தானிருக்கும்.

நடிகருக்கு அழகுணர்வு வேண்டும்

நாடக நடிகன் தன் மெய்ப்பாட்டு உணர்ச்சிகளை

வெளிப்படுத்தப் பயிலும்பொழுது முக்கியமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/77&oldid=1322440" இலிருந்து மீள்விக்கப்பட்டது