பக்கம்:நாடகக் கலை 2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

நடிப்பான் ஒரு நடிகன்; வார்த்தைகளைக் கொலை செய்வான்!......

'என்ன சொன்னாய்?'

என்பதை எண்ண சொண்ணாய்? என்பான். 'கண்ணே என்னோடு பேச மாட்டாயா?' என்றிருக்கும். இவன் 'கன்னே எண்ணோடு பேசமாட்டாயா?' என்பான். மழையை 'மலை'யென்பான். கலையைக் 'களை' யென்பான். இந்தத் தமிழ்க்கொலையைச் சபையோர் எப்படிப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்?

இடமறிந்து பேச வேண்டும்

பேச்சிலே தெளிவு என்னும்போது மற்றொரு கருத்தையும் குறிப்பிடவேண்டும். ஒரு பாத்திரத்தை நெட்டுருப் போடும்போது வார்த்தைகளை நன்றாகக் கவனிக்கவேண்டும். எந்தெந்த இடத்தில் தெளிவும் அழுத்தமும் வேண்டும் என்பதை நன்கு சிந்திக்க வேண்டும். ஒரு நடிகனின் பேச்சிலிருந்து மற்றொரு நடிகனுக்குப் பேச்சுத் தொடங்கும். இது போன்ற சந்தாப்பங்களில் அழுத்தமாகச் சொல்லாவிட்டால் மக்களுக்குப் புரியாது.

'இரத்த பாசம்' ஒரு சமுதாய நாடகம். அதில் ஒரு கட்டம். ராஜாவும், ராணியும், சந்திக்கும் காதல் காட்சி. காட்சி முடியும் சமயம் ராணி நான் வரு கிறேன்' என்கிறாள். மற்ற சமயங்களில் சாதாரணமாக இப்படிச் சொல்வது சபையோருக்குக் கேட்கா விட்டாலும் பாதகமில்லை. ஆனால், இங்கே அவள், 'வருகிறேன்' என்று சொன்னவுடனே 'வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போகிறாயே' என்று சுவையோடு சொல்லுகிறான் ராஜா. இப்பொழுது இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/81&oldid=1550034" இலிருந்து மீள்விக்கப்பட்டது