பக்கம்:நாடகங்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மக்கள் : எங்கள் கொற்றவை வாழ்க. வெற்றித் திருமகள் வாழ்க. வீரத்திருமகள் வாழ்க. (மங்கலப் பெண்கள் ஆரத்திச்சுற்றி Զc5օդւգ- கழிக்கிரு.ர்கள்) அரசன் : பண்புமிக்க பாண்டியப்பெருமக்களே. உங்கள் அன்புக்கும் ஆர்வத்துக்கும் நன்றி. உங்கள் மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சியாக இன்னும் ஒரு செய்தி. этGйт கோமகள் ஒரு வீரமகளாக வளர்ந்து விட்டாள். நானே இந்த நாடாளும் சுமையால் நாளும் முதிர்ந்து கொண் டிருக்கிறேன். உங்களுக்கும் நன்மையாக எனக்கும் உறுதுணையாக இன்று முதல் மீட்ைசி இந்த நாட்டின் இளவரசியாக பொறுப்பேற்கிருள். அவள் ஆட்சி தழைக்க ஆண்டவனே வேண்டுகிறேன். (அதுபோது ஒருவர் மணிமகுடமும் வீர வாகும் வைக்கப்பட்ட தட்டுடன் முன் வருகிருர், அரசன் மீனுட்சிக்கு. அந்த முடியைச் சூட்டுகிருன். வாகை எடுத்துத்தாய் அணிவிக்கிருள்.) மக்கள் : வாழ்க வாழ்க வாழ்கவே. எங்கள் மீளுட்சி வாழ்கவே. தேளுட்சி புரியவந்த மதுரை மீனுட்சி வாழ்கவே. இளவரசி வாழ்க. கன்னிப்பெண்ணரசி வாழ்க. வாழ்கவே. (என வாழ்த்துப்பாடல் போர்ப்பாட்டின் நடை மிடுக்குடன் பின்னணி செய் கிறது. படைவீரர்கள் வீரவணக்கம் செலுத்துகிரு.ர்கள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/119&oldid=781528" இலிருந்து மீள்விக்கப்பட்டது