பக்கம்:நாடகங்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 காட்சி எண்: 27 அரச மாளிகை அரச மாளிகையில் ஒருபுரத்தில் அழகு ஒரு போர்க் கவசத்தைத் துாக்கி தன் மார்பில் கட்டிக் கொண்டிருக்கிருள். அம்பலம் அங்கே வருகிருன். அவளை வர்ணிப்பதாக அம்பலம் : என்ன எடுப்பு எவ்வளவு பளபளப்பு. அழகு : அம்பலம் என்ன சொல்றே? அம்பலம் - நீ கையிலே வெச்சிருக்கிற கவசத்தைச் சொன்னேன் எனக்குன்னு அளவெடுத்து செஞ்சது. இதை அணிஞ்சா வீரம் தானக பிறக்கும் வீரம் பொறக்கும். ஆன ஒரு வீரன் பொறப்பான? அழகு ஏய் இது கன்னித் தமிழ்நாடு. இனி இங்கே காதலுக்குப் பேச்சில்லை. அம்பலம் : அந்த மாதிரி உங்கம்மா நினைச்சிருந்தா நீ. பொறந்திருப்பியா. ஒரு பொண்ணுங்கறதையும் நீ மறந்துட்டு இப்படிப் பேசறியே. அழகு : (கோபமாக) இப்ப நீ என்னதான் சொல்றே? அம்பலம் : நான் சொல்லலியே கேக்கறேன். அழகு : என்ன கேக்கறே? அம்பலம் : இந்த முரட்டுக் கவசத்துக்கு உன் உடம்பிலே இடம் கொடுக்கறியே உன் மனசிலே கொஞ்சம் இடம் எனக்குக் கொடுக்கக் கூடாதா? - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/120&oldid=781532" இலிருந்து மீள்விக்கப்பட்டது