பக்கம்:நாடகங்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 தெரியாமல் பேயாகத் தெரிந்தாப்! யாளியாகவும் காளி யாகவும் தெரிந்தாய்! அது அவர்கள் குற்றமா? மீனு : என் வேதனை தீர வழியென்ன? அகத் : உன்னை விபரீதமாக படைத்த தெய்வத்தை கேட்க வேண்டிய கேள்வி! உலகம் சிரித்தது என்று கொதித்து விட்டாய்! எரித்தும் விட்டாய்! காரியம் கண்னுக்கு தெரியும்! காரணத்தை சிந்தித்துப் பார்! உன் படை வடக்கு நோக்கி கயிலைக்கு நடக்கட்டும்! சிரித்தே திரிபுரமெரித்த அவன் செறுக்கை அடக்கு! உன் சிற்றம் சிவன் மேல் செல்லட்டும்! - காட்சி எண். 39-டி கயிலை பனிக் கோயில்களும் - கோபுரங்களும் - கூடங் களும் - மண்டபங்களுமாக கயிலை காட்சி தருகிறது. தேவ கணங்களும் . பூத கணங்களும் - முனிவர் களும் சிவே கமென' சஞ்சரிக்கிரு.ர்கள்! வெள்ளி யங்கிரியின் முகட்டில் - பனிக் கட்டிபால் ஒரு சிவ லிங்கம் இருக்கிறது. முனிவர்கள் சிவ! சிவ’’ என்று அதனை வலம் வருகிரு.ர்கள். நந்தி தேவர் தன் கணங்களுடன் அதை காத்து நிற்கிரு.ர். அந்தச் சூழ்நிலையில் மீளுட்சியின் படை கயிலே நோக்கி வருகிறது. படைமிடுக்கும் - உக்கிரமும் - அனல் காற்ருக கயிலையை தாக்குகிறது. தேவர்கள் நடு நடுங்குகிரு.ர்கள்! சிவ! சிவ’ என்ற தாதம் அடங்குகிறது! தேவர்கள் திகைத்து, நந்தி தேவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/134&oldid=781562" இலிருந்து மீள்விக்கப்பட்டது