பக்கம்:நாடகங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 கள் : கொல்லி மலைக் குறும்பு கண்ணிலும் இருக் கிறது, சொல்லிலும் இருக்கிறது... ஒரு புலிக்குருளை அவளிடம் வந்தது, எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். கள் : இந்தப் புலிகள் என்ன உனக்குச் செல்லப் பிள்ளைகளோ பை : கொல்வதற்கென்றே வளர்க்கின்றேன். கள் : வளர்த்துக் கொல்ல வேண்டிய வஞ்சம் என்னவோ! பை : வார்த்தைகளால் அதைச் சொல்ல முடியாது என அப்பால் எழுந்து சென்ருள் அவனும் தொடர்ந்தான் (அங்கே ஒரு பலகையில் வேலைப்பாடுடைய வில்லொன்றிருந்தது.) கன் . இது என்ன சித்திரவில்லா? பை : விசித்திரவில். கள் : உனக்கும் விற்பயிற்சி உண்டு என்று சொல்; என எடுக்கப் போஞன். பை : வேண்டாம்...அது அரக்கு வில்; ஒடிந்துவிடும். மெதுவாகத் தொட்டான். விரலால் அசைத் தான் என்னவென்றுணர்ந்தான். கள் : ஏய்க்காதே பெண்ணே! இதற்குள் இரும்புக் கம்பியிருக்கிறது. எனச் சொல்லிக் கொண்டே எடுத்து வளைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/36&oldid=781643" இலிருந்து மீள்விக்கப்பட்டது