பக்கம்:நாடகங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 நிலவு வந்து வெகுநேரமாயிற்று. பைரவியின் வீட்டுக்கதவு திறந்தபடி இருந்தது. கழுகுமலை இருளப்பன் வந்தான். படுத்திருத்த புலிகள் பசித்த நோக்கோடு பார்த்தன. பைரவி பழச்சாறு பிழிந்து கொண்டிருந்தாள். பை வருக; வருக கழுகு மலைக் கள்வனே வருக! கள் : கொல்லிப் பாவைக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் பை : வாயால் சொல்லிப் பயனில்லை. கள் : இந்தக் கரங்கள் நிறைவேற்றக் காத்திருக் கின்றன. சொல்... பை: திறமுடைத்தா என்று எனக்குத் தெரிய வேண்டும்... கள் : தெரிந்து கொள்வாய்... உன் புலிகள் என்ன சைவமா! பழம் பிழிகின்ருய்?... பை : கள் வெறியில் நீ என் கண்களைப் பறிக்காமல் இருப்பதற்குப் பிழிகின்றேன். கள் : மகிழ்ச்சி என அவள் கொடுக்காமலே எடுத்துக் குடித்தான். கள் : சுள்ளென்றிருக்கிறது... ஈரக்கறியும், கள்ளும் கலந்த சுவை! பை : புளித்த மலைத்தேன் படி கலந்தேன்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/35&oldid=781641" இலிருந்து மீள்விக்கப்பட்டது