பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99


மக்கள் போக்கில் போவது வருவாயைப் பொறுத்த, வரையில் கலைஞனுக்கு வெற்றியைத் தரலாம். ஆனல், காட்டின் நலத்தில்-மக்களின் வளர்ச்சியில் காட்டம் கொள்ளாமலிருப்பது காட்டுக்குச் செய்யும் துரோகம் என்றே நான் சொல்வேன்.

காள் முழுவதும் உழைத்து அலுத்துவரும் மக்க வளிலே பலருக்குச் சிறிது கேரம் வேடிக்கையாகப் பொழுது போக்குவது உடனடித் தேவையாக இருக்க லாம். ஆனல், கருணையுள்ளம் கொண்ட கலைஞன் அந்தத் தேவையை மட்டும் கிறைவு செய்தால் போதாது. மக்களின் சிந்தனைக்கு விருந்தாகவும், அவர் களுடைய வாழ்வை உயர்த்துவதாகவும் ஏதாவது செய் யத்தான் வேண்டும். வேடிக்கைக்காக மட்டுமே கலை நிகழ்ச்சிகள இருகக வேண்டுமென்றால, கள்ளுண்டு சில மணி நேரம் களித்திருப்பதற்கும், கலை வெறியில் சில மணி நேரம் களித்திருப்பதற்கும் வித்தியாசமில்லாது போய்விடும். எனவே, கலைஞன் மக்களின் வாழ்வுப் பயனைக் கருதி அவர்களின் சுவையை மாற்றவே முயல வேண்டும்.

தனது கலை நிகழ்ச்சியால் மக்களிடையே ஏற்படும் மாறுதல்களை ஒவ்வொரு கலைஞனும் நுணுக்கமாகக் கவனித்து வரவேண்டும். மக்கள் கலனில நாட்டம் கொண்ட அறிஞர்களின் ஆய்வுரைகளையும் கேட்டு அவ்வப்போது திருத்திக் கொள்ள வேண்டும்.

உயர்ந்த கலைஞன் யார்?

தான் சிந்தித்து முடிவு செய்த கருத்துக்களைப் பொதுமக்கள் பினபற்றும்படியாகச் செய்பவனே கடயர்ந்த கலைஞன். அவனே கலைக்கு உண்மையாக க்