பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102


உணர்ச்சிகளோடு ஒருமைப்படும்போதுதான் நாடகக் கலை அதன் உச்சநிலைக்கு வருகிறது. இது கான் அனுபவத்தின் வாயிலாகக் கண்ட உண்மை

நாகரிகம் தேவை

அரங்கில் கடிக்கப்படும் ஒரு நாடகம் அவையில் எல்லோருக்கும் பிடித்திருக்குமென்று சொல்லமுடியாது. பெரும்பான்மையோருக்குப் பிடித்திருக்கலாம: ஒரு சிலருக்கு விருப்பமில்லாமலு மிருக்கலாம்; அல்லது வேறு சில காரணங்களால நாடகத்தை நன்கு ரசிக்க முடியாமல் நினைவு தடுமாறிய கிலேயிலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் ரசித்துக் கொண்டிருக்கும் பெரும் பான்மையோருக்கு மற்றவர்கள் மதிப்புக் கொடுக்க வேண்டும். நாடக மேடையில கடித்துக்கொண்டு இருக்கும் கலைஞர்களின உள்ளங்கள் புண்படாதவாறு நாகரிகமாய் கடந்து கொள்ள வேண்டும்.

நாடகத்தில் ஓர் உணர்ச்சியான கட்டம்; அவை போர் மெய்மறந்து அதில் ஈடுபட்டிருக்கிறார்கள்; முன் ல்ை உட்கார்ந்திருக்கும் ஒரு ரசிகருக்கு என்ன அவசரமோ தெரியவிலலை. அமைதியைக் குலைக்கும் முறையில் டக் டக்’ என்று மிதியடி தரையில் தாளம் போட விரைவாக எழுந்து போகிறார். எலலோரும் ஒரு வினுடி அவரைப் பார்க்கிறார்கள். அவ்வளவுதான்; அவையோரின் உள்ளங்களை யெல்லாம் ஈர்த்து வைத் திருக்கும் கடிகரின் மனம் உடைந்து போகிறது

மற்றெரு சுவையான கட்டம். அவையோருடைய கினைவு முழுவதும் அரங்கத்திலேயே நிற்கிறது. எங்கும் அமைதி. ஊருக்குப் பெரிய மனிதர் அப்போதுதான் உள்ளே வருகிறார், அவருககு அறிமுகமான இரண்