பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105


இயல்புடையவர்களாக இருக்கிறார்கள். ஒப்புக்காக வந்து உட்கார்ந்துவிட்டுப் போகும் இத்தகைய பண் புடையவர்களைத் த லே ைம தாங்க அழைக்காமல் இருப்பதே நல்லது. அவர்களும் கண்டிப்பாக மறுத்து விடுவது அதைவிட நல்லது. வர ஒப்புக்கொண்டு விட்டால் காடகம் புரிந்தாலும் புரியாவிட்டாலும், பிடித் தாலும் பிடிக்காவிட்டாலும் இறுதிவரை இருந்துவிட்டுப் போவதுதான் காகரிகம். கலைஞர்களுக்கும் மகிழ்ச்சி யாய் இருக்கும். கலைக்கும் சிறப்பளிப்பதாய் இருக்கும். ஊருக்குப் பெரிய மனிதர் எனற முறையில் தலைமை தாங்க வருபவர் இடையே எழுந்துபோய் விடுவது சபையே எழுந்து போய்விடடது போ ன் ற உணர்ச்சியைக கலைஞர்களுக்கு உண்டாக்குகிறது.

ரசிக்க முடியாத அளவுக்கு மோசமான காடகங் களைப் பற்றி கான் இங்கு குறிப்பிடவில்லை. ஒரளவுக்கு ரசிக்கக் கூடியதாக இருக்கும் காடகங்களுக்கு ஆதரவு காட்டுவதன் மூலம் இன்னும் சிறப்புறச் செய்யலாம் என்பதே என் கருத்து. சிரிக்க வேண்டிய கட்டங்களில் வஞ்சகமில்லாமல் வாய்விட்டுச் சிரிக்க வேண்டும். கை தட்டிப் பாராட்ட விரும்பும் கட்டங்களில் கஞ்சத்தனம் செய்யாமல் கையொலி செய்யவேண்டும். இதுதான் கல்ல ரசிகத் தன்மைக்கு அடையாளம். மக்களின் ரசிப்பு ஒன்றுதான் கலைஞனுக்கு உற்சாகத்தைத் தரக் கூடியது.

வாழ்வின் துன்பங்களை யெல்லாம் மறந்துவிட்டு மக்களை மகிழ்விக்க வரும் கலைஞனுக்கு, எதிரே இருப் பவர்களின் ரசிப்பும் ஆதரவும் இல்லாவிட்டால் இன்பத்திற்கு இடமே இல்லை. ஒரு மனிதனுக்கு வாழ்க் கையில் எப்போதோ சில வேளைகளில் ஏற்படக்கூடிய