பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113


திறமையுடைய நடிகர்கள் நடித்தார்களானல், தீய கருத்துக்கள் கூடப் பார்ப்பவர்களுக்கு கல்லவைபோல் தோன்றி ஏமாற்றிவிடும்.’ -

‘பொய்யுடையொருவன் சொல்வன்மையில்ை மெய் போலும்மே மெய்போலும்மே! என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களல்லவா? முழுப் பொய்யைக் கூட் ஒருவன் சாமர்த்தியமாகச் சொல்வதின் மூலம் மெய்யெனறு கம்பவைப்பது போல, கெட்ட நாடகங் களைக்கூட நல்ல கடிப்பின் மூலம் கல்லது போல் கம்ப வைத்துவிட முடியும். 々

எனவே நல்ல நாடகமும் கல்ல கடிப்பும் சேர்ந்து இருந்தால்தான் கன்மை விளையும். உயிர்களிடத்தில் அன்பு, உறுதியான நெஞ்சு, தெய்வபக்தி, உன்னத மான உயர்ந்த எண்ணங்கள் இவற்றையெல்லாம் நல்ல நாடகங்களின் மூலம் குழந்தைகள் பெறவேண்டும்.

தாய் மொழிப்பற்று, தேசபக்தி, தீமைகளை எதிர்த் துப் போராடும் திறமை, பகுத்தறிவு இவையெல்லாம் குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே உண்டாக வேண்டும். நல்ல நாடகங்களின் மூலம் குழந்தைகள் இவற்றை எளிதாகப் பெறலாம்.

நம் குழந்தைகள் அறிவாளிகளாய், வீரர்களாய், தியாகிகளாய் வளரவேண்டும் என்பதுதான் என்னு ஸ்டைய ஆசை. இந்த ஆசை, கல்விக் கூடங்களினல் மீட்டும் நிறைவேறிவிடாது; கலைக்கூடங்களும் இப் பூணியை மேற்கொள்ள வேண்டும் மனத்தைப் பண் படுத்தும் நாடகங்கள் மேடையேறி வெற்றி பெற வேண்டும் என்பதே என் ஆவல்.

தா.-8