பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116


வும் ஏடுகளுக்காகவும் இவர் எழுதிய கட்டுரைகள் மிகப் பல. அவற்றுள் பல நூல் வடிவில் வெளியிடுவதற்கான தகுதி உடையவை. இவரது மணிவிழா 26-4-72-ல் பெருஞ் சிறப்புடன் நடைபெற்றது.

மாநிலம் பயனுற வாழ்ந்த இவர் 15.2.1973-ல் மறைவெய்தினர்; ஆருத்துயர்க் கடலில் ஆழ்ந்தது கலையுலகம். இவரது கலைவாழ்வு நிறைவுற்றது. இவரது கலைப்புகழ் நிலைபெற்றது.

திரு. தி. க. சண்முகம் அவர்களின் வாழ்க்கைச் சிறு குறிப்பு இவ்வளவுதான். ஆனால், இவர் மேற் கொண்ட வாழ்க்கை நெறி இணையற்றது. ஏனைய கலைஞர்களுக்கு இவர் ஒரு வழிகாட்டி,

நீண்ட கெடுங்காலமாகத் திரு. டி. கே. எஸ். அவர் களின் புகழைப்பற்றி அறிந்த எனக்கு 1947-ல்தான் இவரோடு நெருங்கிப் பழகி உள்ளன்புத் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. ஏறத்தாழக் கால் நூற்றாண்டுக் காலம் இவரது கலை வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து பழகியவன் யான். என்னை இவர்தம் ஐந்தாம் உடன் பிறப்பாகவும் ஆருயிர் கண்பனுகவும் கருதிப் பழகிய நட்புறவை எழுத்தில் வடிக்க இயலாது. கைம்மாறு கருதாத அந்தரங்கத் தனிச் செயலாளன் போலவேயான் இவரது ஒவ்வொரு கலைப் பணியிலும் இணைந்திருந்தேன்.

திரு சண்முகம் தம் கலை வாழ்வில் மேற்கொண்ட முக்கிய நெறி முறைகள் வருமாறு:

எங்கும் ஒழுங்கு முறை-எதிலும் ஒழுங்கு முறை என்பது இவரது உறுதியான கோட்பாடு.