பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117


தமக்கு வரும் கடிதங்களைக் கவனமாய்ப் படிப்பார்; தரம் பிரிப்பார்; மறுமொழி எழுத வேண்டியவற்றிற் குத் தாமே தக்கவாறு தமக்கே உரிய பாணியில் அழகான பதில் வரைவார். கடிதங்களையும், செய்தி ஏடு களையும், பிற இதழ்களையும் இவர் அடுக்கி வைத்திருந்த அழகே தனி; ஆங்கிலக் கடிதங்களை என்னிடம் அவ்வப்போது காண்பித்து மறுமொழி எழுதச் செய்து, கோப்பினில் சேர்த்து வைப்பார்.

காலைக் கடன்களை முடித்தபின் முக்கால் மணி கேரம் சுதிப் பெட்டி வைத்துக்கொண்டு, பன்னிரு திருமுறைப் பாடல்களைத் தேர்ந்தெடுத்துத் தனிமையில் இனிமையாக மெய்மறந்து பாடுவார். “பிடியதனுரு உமை’ என்று தொடங்கிக் கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்’ என்ற பாடல் ஈருக மனமார, வாயாரப் பண் முழக்குவது இவரது வழக்கம். பாடும்போது இவரது இனிய குரலுடன் ஊதுவத்தியின் மணமும் அனைவரையும் கவரும்.

இவர் புலால் உணவை அறவே மறுத்தவர். இவருடைய உற்றார் உறவினர் பலர் அசைவ உண வாளர்களாயினும் இவர்தம் குடும்பத்தினரும் திரு. பகவதியின் குடும்பத்தினரும் சைவ உணவாளர் களாகத் தனித்து விளங்குகின்றனர்.

அளவறிந்து கேரந்தவருமல் உணவு கொள்ளும் கற்பழக்கம் உடையவர் திரு. சண்முகம். நினைத்த நேரத்தில் எதையாவது மென்று விழுங்க வேண்டு மென்ற பரபரப்போ ஆவலோ இவரிடம் என்மும் கிடையா ஆl. - > -