பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118


உணவில் மட்டுமன்று; எந்தக் காரியத்திலும் இவர் விரும்பத் தகாத பரபரப்போ ஆவலோ கொள்வதில்லை. எதனையும் ஆறுதலாக அமைதியாகச் சிந்தித்துத் தெளிவான முறையில் செயல்படும பண்பு வாய்ந்தவர்.

மாசுபடாத வெளுத்த உடைகளை நிலைப்பேழையி லிருந்து மெதுவாக எடுத்து, அமைதியாக அணிந்து கொண்டு இவர் வெளியே புறப்படும் பண்பும் வியப்பாக இருக்கும் பேழையிலிருந்து எந்தப் பொருளையும், துணிமணிகளையும் அவசர அவசரமாகக் களைந்து எறிந்து, அப்படி அப்படியே போட்டுவிட்டுக் கிளம்பும் பழக்கம் இவரிடம் கிடையவே கிடையாது.

வெளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய பின்னும் உடைகளை முறையாக மடித்துக் கொடியில் தொங்க விடுவார்.

துயில் கொள்ளச் செல்லும் பண்பிலும் அமைதி தவழும். தலையணை ஒருபக்கம், போர்வை ஒருபக்கம் என இவரது படுக்கை என்றுமே சுருங்கிச் சிதறிக் கிடந்ததை கான் கண்டதில்லை.

தம் நாடகக் குழுவில் சம்பந்தப்பட்ட எல்லாரையும் தம் பிள்ளைகளாகவே கருதி மதித்தார். நாடக நாளன்று ஒப்பனை அறைக்குள்ளே சென்றவுடனே, பகவதி, பிள்ளைகளெல்லாம் வந்து விட்டார்களா?’ என்று நடிகர்களைப் பற்றி இவர் வினவும் பாசக்குரல் மெய் சிலிர்க்க வைக்கும்.

ஒத்திகையின்போது பாடங்களை இவர் சொல்லிக் கொடுக்கும் முறையும் கடித்துக் காட்டும் முறையும் இவர் இணையற்ற கல்லாசிரியர் என்ற உண்மையைப் புலப்படுத்தும்.