பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119


எந்த நேரமும் சிரித்த முகத்தோடு விளங்கும் இவரது கனிந்த பார்வைக்கு முன்னல் எந்த கடிகரும் உட்காருவதற்கே தயக்கம் கொள்வதுண்டு. அவ்வளவு குரு பக்தி எடுத்துக் காட்டாக, இவருடைய மாணவர் கலைஞர் திரு. ஏ. பி. நாகராஜன் இவரது குழுவை விட்டுப் பிரிந்து நெடுங்காலம் ஆகிவிட்ட போதிலும், புகழ் வாய்ந்த திரைப்பட இயக்குநர், வசனகர்த்தாவாக உயர்ந்த பின்னும் திரு. டி. கே. எஸ். அவர்களுக்கு கேர் எதிரே கின்று பேசவோ, அமரவோ துணியாத குரு பக்தியைப் பன்முறை கவனித்துள்ளேன்.

பள்ளிப் படிப்பு எதுவும் இன்றி நாடகத்தையே பள்ளியாகக் கொண்டு, தாமாகவே தமிழ் பயின்று: நூலறிவும், கேள்விச் செல்வமும் பெற்றுச் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் உருவானவர் சண்முகம்.

வாைெலிப் பேச்சு, பத்திரிகைகளுக்குக் கட்டுரை எதுவாயினும் அதைப் பற்றி நன்கு சிந்திப்பார். என்ைேடு மனம் திறந்து கருத்துக்களைப் பொழிவார். நான் சொல்லும் கருத்துக்களையும் ஆவலோடு கேட்டுக் கொள்வார். பின் ஆர அமர இருந்து எழுதுவார். எழுதிய பின் மீண்டும் என்னிடம் படித்துக் காண்பிப் பார். கான் அருமை என்று பாராட்டுவேன் அவர் உள்ளம் பூரிப்பார். இப்படி எத்தனையோ இனிய நாட்கள் பசுமையாக என் நினைவுக்கு வருகின்றன.

தம் நூல்களுக்கு முன்னுரை வேண்டுமென்று கண்பர்கள் வருவார்கள். அந்த நூல்களை என்னிடம் கொடுத்துப் படித்துப் பார்த்துக் குறிப்பு எழுதுங்கள்'