பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120


என்பார். நான் எழுதிக் கொடுப்பேன். அவர் உடனே கருத்தினைச் சொல்ல மாட்டார். அவரே ஒரு முறை நூல் முழுவதையும் நன்கு படிப்பார். பின் என்னை அழைத்து உங்கள் கருத்துக்கள் மிகவும் சரி, கான் நினைப்பதை அப்படியே எழுதியிருக்கிறீர்களே’ என்று வியந்து பாராட்டுவார். கலை, இலக்கியம் போன்ற வற்றில் எங்கள் இருவருடைய கருத்தும் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும். அரசியல் காரியங்களில் மட்டும் கான் அவர் போக்கில் தலையிடுவதில்லை; அவரது கருத்து எனக்கு மாறுபாடாகத் தோன்றினுல்கூடச் சிறிதளவு வாதாடிவிட்டு, எனது வரம்பறிந்து ஒதுங்கிக் கொள்வேன்.

கெஞ்சு மறக்குதில்லையே’, ‘நாடகக்கலை முதலான நூல்களை அவர் எழுதும்போது உடனிருந்து உதவும் பேறு எனக்குக் கிடைத்தது. இவற்றில் சில பகுதிகள் என் இல்லத்தில் வைத்தே எழுதப் பெற்றன என்பதில் எனக்குப் பெருமை.

1953-க்குப் பின் புதிய நாடகங்கள் உருவாக்கிய போதெல்லாம் நாடகச் சுவடிகளைப் படித்து ஆராய்ந்து காட்சிகளை வகுப்பதற்கு, திரு. சண்முகம் அவர்கள் என்னையும் திரு. பகவதி அவர்களையும் அழைத்துக் கொண்டு தனியே உணவு விடுதியின் அறை யொன்றிலோ, வேறு தனி இடத்திலோ சில நாட்கள் தொடர்ச்சியாக ஆய்வுப் பணி செய்து முடிவுகாண்பார்.

எந்தச் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பு வந்தால் அதனை மதித்து வருகை தந்து பெருமைப் படுத்தும் பண்பிலும் இவர் சிறந்து விளங்கினர். வரஇயலாமற் போனல் கட்டாயம் செய்தியாவது அனுப்பி வைக்கத் தவற மாட்டார்.