பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121


இவர் கலைமாமணி மட்டுமல்லர்; தலைசிறந்த இரசிக மாமணியுங்கூட. முத்தமிழ்க் கலைகளே இவர் மனமாரச் சுவைத்து வாயாரப் பாராட்டுவார். எந்த அரங்கிலும் இவரது வெண்கலச் சிரிப்பொலி தனியே அவையோரின் செவிகளில் ஒலிக்கும். தொழில்முறை நடிகர்களை மட்டு மன்றிப் பயில்முறை நாடக மன்றங்களையும் நடிகர் களையும் இவர் உளமாரப் பாராட்டி ஊக்கம் கொடுத்த சிறப்பைக் கலையுலகம் கன்கறியும்.

1955-ல் இலங்கைப் பயணத்தின் போது, கொழும்பு மாநகரில் நடைபெற்ற அவ்வையார்’ காடகத்தில், என்னைக் கபிலராக கடிக்க வைத்தது மன்றி, திரு. சண்முகம் அவர்களே எனக்குத் தம் கைப்பட ஒப்பனை மெருகும் கொடுத்து, அழகுபார்த்து, “புலவர் பெரும, கன்று, நன்று’ என்று காட்சியின் போதே, அவ்வையார் வாய்மூலமாகவே புதிய பாராட்டு உரையாடல் இணைத்து வழங்கியதை கடிக கண்பர்கள் அறிவார்கள். அதற்குப் பின்னும், தம் நாடகங்களில் கபிலர் மற்றும் சில வேடங்களை எனக்கு அளித்து என்னையும் கடிகளுக்கிய அவரது அன்பினை யான் என்றும் மறவேன்.

உடனுக்குடன் முக்கிய கிகழ்ச்சிகளின் போது நான் எழுதிக் கொடுக்கும் பாடல்களையும் பழைய இலக்கியப் பாடல்களையும், அக்கணமே பண்ணமைத்துப் பாடி அவையோரை மெய்சிலிர்க்க வைப்பார்.

இரவு எவ்வளவு நேரம் ஆலுைம் தெளிவாகச் சுவை யாக நாட்குறிப்பு எழுதிவிட்டுத்தான் துயில் கொள்ளச் செல்வார். இவரது 25 ஆண்டுக் கால காட்குறிப்பு ஒரு வரலாற்றுக் களஞ்சியம் போலவே பயன்படக்கூடியது.