பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122


இந்த நாட்குறிப்புகளையும், இவரோடு இணைந்து பழகிய இருபத்தைந்து ஆண்டு அனுபவத்தையும் கொண்டு திரு. பகவதி அண்ணுச்சி அவர்களின் துணை யோடு, திரு. சண்முகம் அவர்களின் ‘எனது நாடக வாழ்க்கை’ என்ற நூலின் இரண்டாம் பாகத்தை யானே எழுதி முடிக்க எண்ணியுள்ளேன்.

1947-ல் திரு அவ்வை சண்முகம் நாடகக் குழுவினருடன் யானும் சிங்கப்பூர், மலேயாவில் ஏறக் குறைய நான்கு மாதங்கள் சுற்றுலா மேற் கொள்ளும் பேறு பெற்றேன். இந்தக் கலையுலாவைப் பற்றி, திரு.டி. கே. எஸ். அவர்களின் பெயரையும் இணைத்து என்னுல் எழுதப் பெற்ற பயண நூல் பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தால வெளியிடப்பட்டுள்ளது இந்த நூலில் எனது பெரும் பொறுப்பைப்பற்றி ஒரு முன்னுரையைத் தாமே எழுதித்தர விரும்புவதாகத் திரு சண்முகம் கூறி யிருந்தார். நூலுக்கு முன்னுரை எழுது முன்பே இவரது கலைவாழ்வுக்கு முடிவுரை எழுதப்படும் துயரம் நிகழுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை!

அரிய நூல்களைக் கண்ணும் கருத்துமாகப் பேணி வந்த இவரது நூலகத்தில் ஏறக்குறைய மூவாயிரம் நூல்கள் உள்ளன. மிகப் பழைய நாடக நூல்கள் இந்த நூலகத்தில் உள்ளபடியால் திரைப்படத் துறையில் உளளவர்கள் பழைய சுவடிகளைத் தேடி இவரிடம் வருவது வழக்கம். சுவடிகள் மட்டுமல்ல, பழைய நாடகக் கலைஞர்களின் படங்களும் இவரிடம்தான் பத்திரமாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட நெறிமுறைகளை விடாமல் பின்பற்றி

வந்த பெருமையில் இவருக்கு ஈடாகச் சொல்ல வேறு எவரும் இலர் என்று திண்ணமாகச் சொல்லலாம்.