பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த சுற்றுலா வார விழாவில் புது உட்லன்சு உணவு விடுதியில் 20.1-1973 இல் அயல் காட்டுப் பயணிகளுக்காக அளிக்கப்பட்ட வரவேற்பு விழாவே திரு சண்முகம் கலந்து கொண்ட கடைசிப் பொது நிகழ்ச்சி. இவ்விழாவில் திரு சண்முகம் அவர்களின் சிற்றுரையும் ஓர் இலக்கியப் பேச்சாகவே இருந்தது. தமிழகக்கலைஞர்களை வெளிநாடுகட்கு அனுப்பிக் கலையின் பெருமையைப் பரப்புவதற்காக அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமெனத் திரு. சண்முகம் வலியுறுத்தினர்.

முத்தமிழ் வித்தகரான திரு. தி. க. சண்முகம் அவர் களின் கலைவாழ்க்கை நெறி முறைகளைக் கலைஞர்கள் மட்டுமன்றித் தமிழ் அன்பர்கள் அனைவருமே இயன்ற வாறு பின்பற்றுதல் சாலச் சிறந்ததாகும்.

-செந்தமிழ்ச் செல்வி 1973