பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4


நீங்களும் நானும் தெரிந்து கொள்வது எப்படி அந்தப் புண்ணியத்தைச் செய்கிருன் நாடகாசிரியன். கல்லவன் கெட்டவன், எல்லோரையும் வேடத்தைக் கிழித்து நாடகமேடையில் காட்டிச் சந்தி சிரிக்க வைக்கிருன். நாடகாசிரியன் பாத்திரப் படைப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பாத்திரங்கள் ஒட்டையாய்விடும்.

ஒட்டைப் பாத்திரங்கள்

நாடகத்தின் சிதறல் சினிமா. அதில் பார்த்திருக்க லாமே நீங்கள், பாத்திரங்களின் குணச்சித்திரங்களே! நிகழ்ச்சிகளுக்குச் சம்பந்தமேயிராது கதாநாயகன் பாடு வான் பாடலை. அப்போதுதான் கேட்பாள் கதாநாயகி ஆடுவாள், அழகாக அபிநயம் பிடிப்பாள். பாடுபவ ராகவும், ஆடுபவளாகவும் கடிகர்கள் அமைவது ஒன்று போதும். வேறு பொருத்தம் வேண்டியதில்லை.

நாடகத்தின் முற்பகுதியில் கதாநாயகன் நல்ல படிப்பாளியாகவும் அறிவாளியாகவும் தன்மானி யாகவும் காட்சியளிப்பான். பிற்பகுதியிலே வேலை கிடைக்காத காரணத்தால் ‘அம்மா பிச்சை’ என்று கிளம்பி விடுவான்.

கதாநாயகி படிப்பில்லாத கிராமப் பெண். ஆனல் அவள் பேசுவாள் இலக்கியம். அள்ளி வீசுவாள் உபமானங்களே! எல்லாம் {❍ ᎥᏜᎰ6öᎢ அழகுக்காக. ஆசிரியரின் கற்பனை வெளிப்பட வேண்டாமா? பாத் திரத்திற்கேற்ற பேச்சு இல்லாவிட்டால் எப்படி இருக்கும்? , - *

‘அண்ணலே! நீவிர் யாண்டிருந்து ஈண்டுப் போந்தீர்?'-ஒரு தோட்டக்காரன் இப்படி பேசில்ை...?