பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7


பொது விதிகள் நடிகர்களின் பயிற்சிக்குப் பெரிதும் பயன்படும்.

தான் எடுத்துக் கொண்ட பாத்திரம், அதன் குணம் இவற்றைப் பற்றி நடிகன் கன்றாகச் சிந்திக்கவேண்டும். பதார்த்தங்களைச் சுவை பார்த்துச் சாப்பிடுகிருே மல்லவா? அதைப்போல உப்போ, புளியோ குறைவது போல் தோன்றுகிறதா? உடனே ஆசிரியரோடு விவா திச்கவேண்டும்.

குணச்சித்திர நடிகன்

ஒத்திகை கடக்கும்போது, தான் புரிந்துகொண்ட படி கடித்துக் காட்ட வேண்டும் கடிகன்.

‘ஒத்திகையா? என்ன சார் ஒத்திகை எல்லாம் மேடையில் பாருங்க சார்?’... தனது திறமையைப் பெரி தாக கினைத்துக் கொள்ளும் நடிகர்கள் சிலரின் அலட் சியப் பேச்சு இது. சிறந்த கடிகளுயிருந்தாலும் ஒத்திகை கிரம்ப அவசியம்; பழகப் பழகத்தானே மெருகு ஏற்படும். முடிந்தால் கண்ணுடி முன் கின்று தானே கடித்துப் பார்ப்பதுகூட நல்லது. வசனத்தைப் பற்றிய சந்தே கமோ வேறு விதமான சிந்தனைகளோ எதுவும் வரக் கூடாது. மேடையில் ஒத்திகை அதற்கு உதவி செய்யும்.

பாத்திரத்திற்கேற்ற மனுேபாவம் கடிகனுக்கு வர வேண்டும். உருவத்தையும் உடையையும் மாற்றினுல் போதாது. கேற்று கிழவன், இன்று குமரன்; கேற்று அரசன், இன்று ஆண்டி; பேச்சு, கடை, குரல், பாவம் எல்லாம் மாறவேண்டும் பாத்திரங்களுக்கேற்ப, இல்லா விட்டால் நீங்கள் குணசித்திர நடிகன் (Character Αctor) என்று புகழ்வீர்களா?